சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானது என, அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும், சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தினர்.. சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் கருங்கடல் கிராமம் மேல பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தங்கத்துரை- விஜயா தம்பதியரின் மகன் பெலிக்ஸ் காபிரியேல் மார்க் (வயது 27). சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் (ஆட்டோ மொபைல்) படிப்பை கடந்த 2019ஆம் ஆண்டு முடித்தார். அதன்பின் அவர் எதிர்பார்த்த பணி கிடைக்கவில்லை. இதனால் அவரது தந்தை தங்கத்துரை, ஐஏஎஸ் தேர்வு எழுத வலியுறுத்தினார். முதலில் அத்தேர்வு கடினம் என மறுத்து வந்த பெலிக்ஸ் காபிரியேல் மார்க், பின்னர் தந்தை […]
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் கோவில்பட்டி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி அரசியல் சாசன சட்ட உரிமை தொழிற்சங்க கூட்டு பேர உரிமையை பறிப்பதை கண்டித்தும், தொழிற்சங்க கொடிமரம் தகவல் பலகையை அகற்றி தொழிற்சங்க கூட்டு பேர உரிமை பறிப்பு ஜனநாயக படுகொலை நடத்துவதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவில்பட்டி கோட்டத்தலைவர் பரணிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் […]
நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பதவி வகித்த டி.ஜெயக்குமார், தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியும், அடியாட்களை வைத்து மிரட்டியும் தனது நிலத்தை அபகரித்து கொண்டதாக, அவரது மருமகன் நவீன்குமாரின் சகோதரர் மகேஷ் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை […]
தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. 22-4-2025 மற்றும் 23-4-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24-4-2025 முதல் 28-4-2025 வரை: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை […]
கோவில்பட்டி ஜி.வி.என் (தன்னாட்சி) கல்லூரியின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்த மாணவர்களுக்காக நடத்தப்படும் இலவச கோடைகால பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பயிற்சி வகுப்பு தொடக்க விழா நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் சிறப்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் மற்றும் சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குநர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவர்கள் மாணவர்களுக்கு புதிய பரிமாணங்களை அளிக்கும் வகையில் கல்வி, தொழில் மற்றும் நுண்ணறிவுத் திறன்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு […]
சாதி பெயர் நீக்கும் உத்தரவுக்கு அரசு மேல்முறையீடு செய்யக்கோரி கோவில்பட்டியில் அனைத்து சமுதாய
கல்வி நிறுவனங்களின் சாதிப் பெயரை நீக்கி பிறப்பித்த நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தி கோவில்பட்டியில் அனைத்து சமுதாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சீனிராஜ் தலைமை தாங்கினார். மதுரை பட்டிமன்ற நடுவர் ஆவணி மாடசாமி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், விஸ்வகர்ம மேல்நிலைப்பள்ளி தலைவர் பாலமுருகேசன், யோகீஸ்வரர் சமுதாய பேரவை மாநில பொருளாளர் சுரேஷ், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்வம், தமிழ்நாடு […]
தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.2,489 கோடி அதிகரித்துள்ளதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் கடந்த 2024 – 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. அயல்நாட்டு மதுபானங்களை இறக்குமதி செய்ததன் மூலமாக 2024-25 -ஆம் ஆண்டில் (31.03.2025 வரை) சிறப்புக் கட்டணமாக அரசுக்கு ரூ.62.88 கோடி மற்றும் சேவைக் கட்டணமாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு ரூ.32.52 லட்சம் வருவாய் […]
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 1299 காவல் சார்பு ஆய்வாளர் பதவி (எஸ்.ஐ.) தேர்விற்கான நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 23.4.2025 ( புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வரும் மாணவர்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் […]
திருநெல்வேலி ஜே.சி.ஐ. கிளாசிக் மற்றும் ஜே.காம் இணைந்து மும்மடங்கு தொழில் வளர்ச்சி பெறுவது எப்படி? என்பது பற்றிய பயிற்சி அரங்கத்தை நடத்தியது திருநெல்வேலி பால்மைரா கிராண்ட் இன் ஹோட்டலில் நடந்த இந்த பயிற்சி அரங்கில் தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் ஜே.காம் தலைவர் ஜேசு மரிய அந்தோணி வரவேற்று பேசினார். ஜே.சி.ஐ.கிளாசிக் தலைவர் நெல்லை முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஜே.சி.ஐ. பிசினஸ் டிரெய்னர் ஆடிட்டர் டி.எஸ்.மகாராஜ் பங்கேற்றார். அவரை அறிமுகபடுத்தி முத்துராஜ் […]