சாதி பெயர் நீக்கும் உத்தரவுக்கு அரசு மேல்முறையீடு செய்யக்கோரி கோவில்பட்டியில் அனைத்து சமுதாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கல்வி நிறுவனங்களின் சாதிப் பெயரை நீக்கி பிறப்பித்த நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தி கோவில்பட்டியில் அனைத்து சமுதாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சீனிராஜ் தலைமை தாங்கினார். மதுரை பட்டிமன்ற நடுவர் ஆவணி மாடசாமி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், விஸ்வகர்ம மேல்நிலைப்பள்ளி தலைவர் பாலமுருகேசன், யோகீஸ்வரர் சமுதாய பேரவை மாநில பொருளாளர் சுரேஷ், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்வம், தமிழ்நாடு காமராஜர் பேரவை பொதுச் செயலாளர் பாஸ்கரன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


