ஜி.வி.என் கல்லூரியில் மாணவர்களுக்கான இலவச கோடைகால பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

கோவில்பட்டி ஜி.வி.என் (தன்னாட்சி) கல்லூரியின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்த மாணவர்களுக்காக நடத்தப்படும் இலவச கோடைகால பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பயிற்சி வகுப்பு தொடக்க விழா நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் சிறப்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் மற்றும் சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குநர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவர்கள் மாணவர்களுக்கு புதிய பரிமாணங்களை அளிக்கும் வகையில் கல்வி, தொழில் மற்றும் நுண்ணறிவுத் திறன்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு அறிமுக வகுப்புகள் நடத்தப்பட்டது. முதல் நாளில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் மாணவர்களின் வசதிக்காக இலவச பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த இலவச கோடைகால பயிற்சி வரும் 29.4.2025 வரை நடைபெறும்.


