கோவில்பட்டியில் நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் கோவில்பட்டி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி அரசியல் சாசன சட்ட உரிமை தொழிற்சங்க கூட்டு பேர உரிமையை பறிப்பதை கண்டித்தும், தொழிற்சங்க கொடிமரம் தகவல் பலகையை அகற்றி தொழிற்சங்க கூட்டு பேர உரிமை பறிப்பு ஜனநாயக படுகொலை நடத்துவதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கோவில்பட்டி கோட்டத்தலைவர் பரணிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் செல்லச்சாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை அகில இந்திய ஆயுள் காப்பீடு கழக இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோட்ட பொறுப்பாளர் லெனின் கிருஷ்ணசாமி கண்டன உரையாற்றி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஜெயசித்ரா,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளை செயலாளர் பிரான்சிஸ், திருமாலை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் மாநில செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வட்டச் செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.
