கோவில்பட்டி இலட்சுமி ஸ்ரீனிவாசா வித்யாலயா பள்ளி மாணவி பர விந்தியா மார்ச் 27 முதல் 30 வரை பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி வெண்கலப்பதக்கம் வென்றார். -2024 2025 ஆம் கல்வியாண்டில் SGFI தேசிய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி வெள்ளிப்பதக்கம் வென்றார். பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் தங்க பதக்கம் வேன்றுள்ளார். முதலமைச்சர் கோப்பைக்கான […]
தூத்துக்குடியில் வருகிற 5ம் தேதி 12ஆம் வகுப்பு படித்து முடித்துள்ள மாணவர்ர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- துாத்துக்குடி மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடப்பு கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு படித்து முடித்துள்ள மாணாக்கர்களுக்கான ”என் கல்லுரரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி தூத்துக்குட சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 5.4.2025 ம் தேதி […]
சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படுவதால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.67 ஆயிரத்தை கடந்தது. இந்த நிலையில், கோவில்பட்டியில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி, பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.68,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,510-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் […]
தூத்துக்குடி மாவட்ட தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் கிராமப் பகுதிகளில் உள்ள வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து சுகாதார காவலரிடம் வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆவல்நத்தம் கிராம ஊராட்சியில் வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என முறையாக தரம் பிரித்து தூய்மை காவலரிடம் வழங்கிய மகேஸ்வரி, அனிதா,சங்கரலட்சுமி, ராதாருக்மணி, சமுத்திர வள்ளி, செல்வ ஈஸ்வரி ஆகியோருக்கு தூத்துக்குடி […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் செல்போன் திருட்டு போனதாக பெறப்பட்ட மனுக்கள் மற்றும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு . ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார், அதன்படி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் சூப்பிரண்டு சகாய ஜோஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர். சாந்தி தலைமையிலான போலீசார் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ ((IMEI)) எண்ணை வைத்து தொழில்நுட்ப […]
கோவில்பட்டி கோ வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன் கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து கல்லூரி சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது. கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற இந்த முகாமை கல்லூரி செயலர் மகேந்திரன் தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சுப்புலட்சுமி, சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குனர் வெங்கடாசலபதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கண் மருத்துவர்கள் கீர்த்தனா மற்றும் ரிங்சன் […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தேர்வாணையம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இதன்படி, குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டு உள்ளது. இதன்படி, ஜூன் 15-ந்தேதி இந்த பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறும். துணை கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 8 முக்கிய பதவிகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. குரூப் 1 தேர்வுக்கு மொத்தம் 70 காலி பணியிடங்கள் […]
நெல் அறுவடைக்கு பின் பயிரிடப்பட்ட சில உளுந்து இரகங்களில் மஞ்சள்நிற தேமல் நோய் ( YELLOW MOSAIC VIRUS) பூக்கும் தருணத்தில் தாக்குதலால் உளுந்தில் மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த மஞ்சள் தேமல் நோயை ஒருங்கிணந்த முறையில் எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்து விரிவாக பார்ப்போம். மஞ்சள் தேமல் நோய் ஒரு வகையான நச்சுரியால் உண்டாகிறது.குறிப்பாக சாறு எஉறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ ( BEMISIA TABACI)யால் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரவுகிறது.இது வைரஸ் நோயாகும். பயறுவகை […]