உளுந்தில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி?

நெல் அறுவடைக்கு பின் பயிரிடப்பட்ட சில உளுந்து இரகங்களில் மஞ்சள்நிற தேமல் நோய் ( YELLOW MOSAIC VIRUS) பூக்கும் தருணத்தில் தாக்குதலால் உளுந்தில் மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்த மஞ்சள் தேமல் நோயை ஒருங்கிணந்த முறையில் எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்து விரிவாக பார்ப்போம்.
மஞ்சள் தேமல் நோய் ஒரு வகையான நச்சுரியால் உண்டாகிறது.குறிப்பாக சாறு எஉறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ ( BEMISIA TABACI)யால் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரவுகிறது.இது வைரஸ் நோயாகும்.
பயறுவகை பயிர்கள்( பாசிப்பயறு துவரை , உளுந்து) வெண்டை மற்றும் சோயா மொச்சை , மரவள்ளிக்கிழங்கு போன்ற பயிரை இந்த மஞ்சள் தேமல் நோய் தாக்கும்.

தாக்குதலின் அறிகுறி
1) நோய் முதலில் இளம் இலைகளில் ஆங்காங்கு மஞ்சள்நிற புள்ளிகள் காணப்படும்.
2) தாக்குதல் படிப்படியாக இலை முழுவதும் பரவி திட்டு திட்டாக ஓழங்கற்ற மஞ்சளும் பச்சையும் கலந்த பகுதிகள் உண்டாகும்.
3)சில சமயத்தில் பாதிக்கப்பட்ட இலைகள் சுருங்கியும் சிறுத்தும் காணப்படும்.
நாளடைவில் மஞ்சள் நிறப்பகுதி அதிகமாகி கொண்டே வந்து சில துளிர் இலைகள் கூட மஞ்சள்நிறமாக மாறும்.
நோயற்ற செடிகள் தாமதமாகி காய்கள் வந்தாலும் குறைந்த எண்ணிக்கையில் தான் வரும் சில சமயங்களில் காய்களும் விதைகளும் மஞ்சளாகி மாறிவிடும்.50-70% மகசூல் குறைய வாய்ப்பு.
இளம்பருவத்தில் தோன்றினால் முழுமையாக மகசூல் பாதிக்கும்..
ஒருங்கிணந்த முறையில் இந்த நோயை ( YMV) கட்டுப்படுத்தும் முறைகள்:
1) நோய் எதிர்ப்பு திறனுள்ள இரகங்களான வம்பன் 6, 8, 11போன்ற இரகங்களை பயன்படுத்திட வேண்டும்.
2) விதை நேர்த்தி.ஓருகிலோ விதைக்கு 2கிராம் போராக்ஸ் மற்றும் 10% நொச்சி இலை சாறு 300மிலி யுடன் கலந்த கலவையில் 30நிமிடங்கள் ஊற வைத்து பின்பு உலர்த்தி ஒருகிலோ விதைக்கு 5மிலி இமிடா குளோபிரிட் கலந்து விதை நேர்த்தி செய்த பின் விதைக்க வேண்டும்.

3) நோய் எதிர் உயிர் கொல்லியான பேசில்லஸ் சப்டிலிஸ் 1கிலோவை 100 கிலோ மக்கிய எருவுடன் கலந்து நிலத்தில் இடவேண்டும்.
4) வரப்பு பயிராக மக்காசோளம் விதைக்க வேண்டும்.
5) மஞ்சளாக மாறிய இலைகள் தென்பாட்டால் அவற்றை செடியுடன் பிடுங்கி அப்புறப்படுத்த பட வேண்டும் / அழிக்க வேண்டும்.
6) இந்த நோயை விரிவாக பரப்பக்கூடிய வெள்ளை ஈயை கட்டுப்படுத்த அசிட்டாமிப்ரிட் 100கிராம்/ மீத்தைல் டெமாட்டான் 200மி.லி / இமிடா குளோப்பிரிட் 100மிலி 200லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இந்த மஞ்சள் தேமல் நோய் வெப்பமான வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதமாக உள்ள காலங்களில் அதிகமாக தாக்குகின்றன.எனவே தற்போதைய கால கட்டத்தில இந்த நோயின் தாக்குதல் அதிகமாக தென்படுவதால் ஒருங்கிணந்த முறையில் பயிர்பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அவ்வாறாக செய்தால் இந்த நோயின் தாக்கத்திலிருந்து குறையலாம்.
அக்ரி சு சந்திர சேகரன் வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை. செல்:9443570289
