கவர்னர் மாளிகையில் நடக்கும் கம்ப சித்திரம் விழாவில் கோவில்பட்டி கம்பன் கழக செயலாளர் சரவணச் செல்வன் கவுரவிக்கப்படுகிறார்

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை வளாகத்தில் உள்ள பாரதியார் மண்டபத்தில் 5 -ந் தேதி சனிக்கிழமை காலை 10மணிக்கு கம்ப சித்திரம் விழா நடைபெறுகிறது.
கம்பரையும், ராமனையும் கொண்டாடும் இவ்விழாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்குகிறார்.
தமிழ்ப்பணியிலும் கம்பன் பணியிலும் தம்மைச் சிறப்பாக ஈடுபடுத்திக் கொண்ட 50 பேரை தேர்ந்தெடுத்து விழா மேடையில் கவர்னர் கவுரவிக்கிறார்.
கவர்னர் கவுரவிக்கும் 50 பேர்களில் கோவில்பட்டி கம்பன் கழக செயலாளர் சரவணச் செல்வன் ஒருவர். விழாவில் கலந்து கொள்வது பற்றி அவர் கூறுகையில்.” என் தமிழ்ப் பணிக்கு உறுதுணையாக இருந்த அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை உரித்தாக்குகின்றேன்: என்று குறிப்பிட்டார்.
கவர்னர் மாளிகை விழாவில் பங்கேற்க சரவணச் செல்வனுடன் கோவில்பட்டி கம்பன் கழகத் தலைவர் வெ.மு. லட்சுமணப் பெருமாள், இணைச் செயலாளர் பிரபு அப்பாசாமி ,நாடார் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜான் கணேஷ், சரவணச் செல்வன் பெற்றோர் .தங்கமாரியப்பன் – பொன்னுக்கனி, மகள் சுபத்ரா, நண்பர் விசுவாசராஜ் ஆகியோர் விழாவில் கலந்துகொள்கின்றனர்.
