• April 4, 2025

இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு:  தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

 இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு:  தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

அஸ்ட்ரோ முத்துமுருகன்

தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்துமுருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி  சார்பில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள்  மற்றும் பொதுமக்களிடம் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் கருத்துக்களை பல்வேறு நிகழ்வுகள் மூலம் பரப்புரை செய்து வருகிறது.

இதில் 17 முதல் 22 வயதுவரை உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில்  இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டினை ஜூன்  மாதம் கோவையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் இளைஞர்கள் வானவியல் குறித்த ஆய்வுக் கட்டுரைகள், போஸ்டர்கள் தயாரிப்பு, குறும்படம் தயாரிப்பு, அஸ்ட்ரானமி போட்டோகிராபி, புதுமையான விளையாட்டுக்கள் உருவாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் இணையதள வழியில் பதிவு செய்து பங்கேற்கலாம். பதிவு செய்த இளைஞர்களுக்கு  மாநாட்டில் பங்கேற்பது குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்

இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் இளைஞர்கள் நிகழ்வுகள் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமாரை 9840607391 எண்ணில் தொடர்பு கொண்டு https://tass.co.in/yassc-2025 என்ற இணைய வழியில் பதிவு செய்து பங்கேற்கலாம்

இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்துமுருகன் கூறி இருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *