• April 4, 2025

தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்தது

 தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்தது

தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்து பெரும்பாலான நாட்கள் விலை ஏற்றத்திலேயே காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது.

மார்ச்  28-ந் தேதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று பவுனுக்கு அதிரடியாக ரூ.400 அதிகரித்து இருக்கிறது.

அதன்படி, கோவில்பட்டியில்  இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.68,480-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ரூ.50 அதிகரித்து ரூ.8,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.112-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்த பரஸ்பரம் வரி அமலுக்கு வந்துள்ள  நிலையில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது தங்களுடைய கவனத்தை திருப்பி இருப்பதால், தங்கம் விலை தொடர்ந்து விலை உயர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *