கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சி மறவர் காலனி, தாமஸ் நகர் பகுதிகளில் 50 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு ஊராட்சி தீர்வை ரசீது, மின் இணைப்பு, சாலை மற்றும் வாறுகால் வசதி செய்து தர வேண்டும். அவர்களது வீடுகளுக்கு பட்டா வழங்காத அதிகாரிகளை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை வட்டாட்சியர் சரவணபெருமாள் தலைமையில் […]
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 56 பயனாளிகளுக்கு ரூ.20.55 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை இ-பட்டாக்களையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 20 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்குவதற்கு நேரில் விண்ணப்பிக்க நாளை
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும், புதிதாக கண்டறியப்பட்ட 20 வழித்தடங்கள் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டு, சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினிப்பேருந்துக்கான SCPA விண்ணப்பப்படிவத்தினை Parivahan மூலமாக விண்ணப்பித்து ஆன்லைனில் கட்டணம் ரூ.1500+100=1600/- மற்றும் கால நிர்ணய கட்டணம் ரூ.600/- ஆக மொத்தம் ரூ.2200/- செலுத்தி விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து விலாசசான்றுக்கான ஆவணத்துடன் உரிய இணைப்புகளுடன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சம்பந்தப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதம்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படும். அதன்படி கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் தக்கார் அருள் முருகன் தலைமையில் இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர் தங்கம், நாகவேல், அலுவலக கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் செந்தில் நாயகி ஆகியோர் முன்னிலையில் காணிக்கைகள் எண்ணப்பட்டன. சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேத பாடசாலை உழவார பணி குழுவினர் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளாக வேலாண்டி, […]
கோவில்பட்டி வட்டாரம் ஈராச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குடப்பட்ட பாண்டவரமங்கலம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் செலவில் துணை சுகாதார மையக் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அமைச்சர் பெ. கீதா ஜீவன் முன்னிலையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். பின்னர் குத்து விளக்கு ஏற்றினார். .இந்த புதிய துணை சுகாதார மையத்தில் VHN,MLHP,WHV ஆகிய […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பது மட்டுமில்லாமல் சில படங்களை இயக்கியும் இருக்கிறார். அதன்படி, அவர் இயக்கிய முதல் படம் ‘பவர் பாண்டி’. இப்படம் சுமாரான வெற்றியை பெற்றது. 2-வதாக தனுஷ் இயக்கிய படம் ‘ராயன்’. இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவரது இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று […]
கர்நாடக அரசின் செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை சார்பில் 16-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது. ‘வேற்றுமையில் உலகளாவிய அமைதி’ எனும் கருப்பொருளில் திரைப்பட விழா நடக்கிறது. கடந்த 2-ந் தேதி நடைபெற்ற தொடக்க விழாவில், பெரும்பாலான கன்னட நடிகர், நடிகைகள், திரையுலகினர் யாரும் பங்கேற்கவில்லை. சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கேட்டு வரும் போது, அவர்களை பார்த்து கொள்கிறேன் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மிரட்டும் விதமாக பேசியிருந்தார். இதற்கிடையில், திரைப்பட விழாவில் நடிகை […]
லவ் டுடே’ படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்துள்ளார். கடந்த 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு […]
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயலாளர் மரகதலிங்கம் தலைமை தாங்கினார், மாநில முன்னாள் பொதுச் செயலாளர் கணேசன் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ரவி, டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் அந்தோணிராஜ், மாவட்ட துணை தலைவர் பூராணம், பிரச்சார செயலாளர் மாடசாமி, அரசு பணியாளர் சங்க […]