தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 20 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்குவதற்கு நேரில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும், புதிதாக கண்டறியப்பட்ட 20 வழித்தடங்கள் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டு, சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினிப்பேருந்துக்கான SCPA விண்ணப்பப்படிவத்தினை Parivahan மூலமாக விண்ணப்பித்து ஆன்லைனில் கட்டணம் ரூ.1500+100=1600/- மற்றும் கால நிர்ணய கட்டணம் ரூ.600/- ஆக மொத்தம் ரூ.2200/- செலுத்தி விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து விலாசசான்றுக்கான ஆவணத்துடன் உரிய இணைப்புகளுடன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சம்பந்தப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் 5.3.2025-க்குள்(நாளை ) நேரில் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
*ஹார்பர் வாட்டர் டேங் முதல் புதுக்கோட்டை– 24.4 கி.மீ
*பழைய பேருந்து நிலையம் முதல் காலாங்கரை– 23.4. கி.மீ
*திரேஸ்புரம் முதல் அய்யனடைப்பு சண்முகபுரம்– 12.5 கி.மீ
*முள்ளக்காடு முதல் திரேஸ்புரம்– 21.3 கி.மீ
*F.C.I. குடோன் ரவுண்டானா முதல் பழைய பேருந்து நிலையம் – 10.5 கி.மீ
*பழைய பேருந்து நிலையம் முதல் ஜோதி நகர்– 9.8 கி.மீ
*திருச்செந்தூர்
(தேரியூர் முதல் திருச்செந்தூர் வரை- 16.1 கி.மீ.
*சோனகன் விளை முதல் காயல்பட்டணம்- 13.4 கி.மீ.
*பழையகாயல் முதல் வனதிருப்பதி வரை- 23.5 கி.மீ
*திருச்செந்தூர் முதல் செட்டியாபத்து வரை – 19.5 கி.மீ
*திருச்செந்தூர் MLA அலுவலகம் முதல் உடன்குடி பேருந்து நிலையம் வரை -20..4 கி.மீ
*உடன்குடி முதல் மெஞ்ஞானபுரம் (ஆணையூர்) -19.7 கி.மீ.
கோவில்பட்டி
*குளத்தூர் முதல் சோழபுரம்– 24.5 கி.மீ
*வேலாயுதபுரம் முதல் அரியநாயகிபுரம்– 12.3 கி.மீ
*எட்டையாபுரம் முதல் ஈராச்சி– 8.9 கி.மீ
*எட்டையபுரம் முதல் கடலையூர்– 12.5 கி.மீ
*எட்டையபுரம் பேருந்து நிலையம் முதல் கருப்பூர்– 14.2 கி.மீ
*கட்டலாங்குளம் முதல் கயத்தார் பிரிவு– 15 கி.மீ
*கயத்தார் பஸ்நிலையம் முதல் செட்டிகுறிச்சி– 22.5 கி.மீ
*வேடநத்தம் முதல் வேப்பலோடை வரை– 13.3 கி.மீ
மேலும், SCPA Form with fees of Rs. 1500+100+600/-, Address evidence, Road worthy certificate from A.E/D.E. Highways, Tentative timings, Route –Map/Sketch, Solvency Certificate ஆகிய ஆவணங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கஇளம்பகவத் தெரிவித்துள்ளார்.
