பாண்டவர்மங்கலத்தில் துணை சுகாதார மைய கட்டிடம் ; கனிமொழி எம்.பி.திறந்து வைத்தார்


கோவில்பட்டி வட்டாரம் ஈராச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குடப்பட்ட பாண்டவரமங்கலம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் செலவில் துணை சுகாதார மையக் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அமைச்சர் பெ. கீதா ஜீவன் முன்னிலையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். பின்னர் குத்து விளக்கு ஏற்றினார்.
.இந்த புதிய துணை சுகாதார மையத்தில் VHN,MLHP,WHV ஆகிய 3 சுகாதார பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். இங்கு இந்த பகுதியில் உள்ள சுமார் 6 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.
கர்ப்பிணி பெண்கள் பிரசவத்துக்கு முன் மற்றும் பிரசவத்துக்கு பின் பராமரிப்பு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான ஊட்டசத்து பொருட்கள் இலவசமாக விநியோகம் செய்யப்படும்.
ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் செவிலியர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள்.அவர்கள் ஒவ்வொரு மாதமும் எடுக்கப்படும் பரிசோதனை மற்றும் சிகிச்சை விவரங்கள் குறிப்பிடப்பட்டு அட்டவணை பாராமரிக்கபப்டும்.
கர்ப்பிணி பெண்களிடம் செவிலியர்கள் அவ்வப்போது தொடர்பு கொண்டு பேசி, சிகிச்சை முறைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்வதுடன் பிரசவ காலம் நெருங்கி வரும் சமயத்தில் ஈராச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்து அங்கு பிரசவம் நடக்கும்.
நேற்றைய விழாவின் போது கர்ப்பிணி பெண்களுக்கு கனிமொழி எம்.பி.ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய கூடைகளை வழங்கினார்.
நிகழச்சியில் தூத்துக்குடி துணை ஆட்சியர் , தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள், கோவில்பட்டி சுகாதார மாவட்டம் வித்யா விஸ்வநாதன் மாவட்ட சுகாதார அலுவலர், மற்றும் கீழ ஈரால் வட்டார மருத்துவ அலுவலர் உமா செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்
