சுந்தர் சி திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் 25 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.. இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘அரண்மனை 4 மற்றும் மதகஜராஜா’ ஆகிய படங்கள் பிரமாண்ட வெற்றியை பெற்றன. தற்போது இவர் ‘கேங்கர்ஸ் மற்றும் மூக்குத்தி அம்மன் 2’ ஆகிய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை நடைபெற்றது. இந்நிலையில், இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி, 25-வது திருமணநாளையொட்டி தனது குடும்பத்தினருடன் […]
‘லவ் டுடே’ படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ படத்தில் நடித்துள்ளார். கடந்த 21-ந் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் நடித்துள்ள இந்த படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து தொடர்ந்து திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழ், தெலுங்கை தொடர்ந்து […]
சிகரெட் லைட்டர் விற்பனைக்கு தடை- 12 ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டத்தில் சேர்க்க வேண்டும்;முதல்
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்த்தித்து பேசினார். அப்போது முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் துரை வைகோ கூறி இருப்பதாவது: மக்காச்சோளத்திற்கு, 1% செஸ் வரியை நீக்கம் செய்து மக்காச்சோள விவசாயிகளின் வயிற்றில் முதல்வர் பாலை வார்த்துள்ளார் அதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்துக்கொண்டேன். அப்போது எனது நான்கு முக்கிய கோரிக்கைகளை அவரிடம் தெரிவித்தேன். அதன் விவரம் பின்வருமாறு: 1) கோவில்பட்டி, சாத்தூர், […]
கோவில்பட்டி, தூத்துக்குடி உள்பட 7 ஊர்களில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 3252 வழக்குகளுக்கு
கோவில்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 3252 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதன்மை மாவட்ட நீதிபதி/தலைவர் வசந்தி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 5 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 அமர்வுகளும், திருச்செந்தூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் சாத்தான்குளம் தலா ஒரு அமர்வு […]
நாடு முழுவதும் மார்ச் 8ம் தேதி மகளிருக்கு சம உரிமை வழங்கிடவும், மகளிரின் மகத்துவத்தை உலகிற்கு பறைசாற்றவும் சர்வதேச மகளிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நேற்று கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த சர்வதேச மகளிர் தின விழாவிற்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் செல்வராஜ், தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி பேராசிரியர் கோகிலா அனைவரையும் […]
கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள ஈக்விடாஸ் வங்கி சார்பில் மகளிர்தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி வங்கியின் வர்த்தக மேம்பாட்டு மேலாளர் ரமேஷ், உதவி மேலாளர்கள் பழனி கணேஷ், விண்ணரசன், விஜய் கருப்பசாமி ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு பணியில் இருந்த செவிலியர்களுக்கு இனிப்பு வழங்கி மகளிர் தின வாழ்த்து தெரிவித்தனர். மேலும் சொர்ணா நர்சிங் இன்ஸ்டிடியூட் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு சென்று அங்கு பணிபுரியும் பெண்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் வங்கியின் சேமிப்பு […]
தமிழக வெற்றிக்கழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவில்பட்டி சிதம்பரநாடார் காமாட்சி அம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைமை நிர்வாகி பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார் மாவட்ட நிர்வாகிகள் சத்யா சுரேஷ், ஜான்சி கண்ணன்,கோவில்பட்டி ஒன்றிய நிர்வாகி அய்யம்மாள் ஆகியோர் முன்னில வகித்தனர் .மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் முனைவர் சம்பத்குமார் சிறப்புரை ஆற்றினார். கோவில்பட்டி மத்திய ஒன்றிய […]
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றியதோடு மட்டுமல்லாமல், சண்டை காட்சிகளில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் கனல் கண்ணன். சமீபத்தில் திருப்பரங்குன்றம் மலை குறித்து இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது சர்ச்சையானது. இதுதொடர்பாக, சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது மதுரை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, கனல் கண்ணன் சர்ச்சைப் பதிவை நீக்கியதாக கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில், அவருக்கு முன் ஜாமீன் வழங்கி மெட்ராஸ் ஐகோர்ட்டு […]
தமிழ் திரையுலகில் இருந்து இன்று பாலிவுட் திரையுலகம் வரை சென்றுள்ள முன்னணி இயக்குனர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் விஜய்யை வைத்து “தெறி, மெர்சல், பிகில்” ஆகிய ஹிட் படங்களை கொடுத்து பிரபலமானார். பின்னர் பாலிவுட்டில் கலமிறங்கிய அட்லீ, ஷாருக்கானை வைத்து இயக்கிய ‘ஜவான்’ படம் ரூ. 1,200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது அட்லீ, அல்லு அர்ஜுனை இயக்க உள்ளதாகவும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் […]