நேர்த்திக்கடன் :பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்த சுந்தர்.சி

சுந்தர் சி திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் 25 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்..
இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘அரண்மனை 4 மற்றும் மதகஜராஜா’ ஆகிய படங்கள் பிரமாண்ட வெற்றியை பெற்றன.
தற்போது இவர் ‘கேங்கர்ஸ் மற்றும் மூக்குத்தி அம்மன் 2’ ஆகிய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை நடைபெற்றது.
இந்நிலையில், இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி, 25-வது திருமணநாளையொட்டி தனது குடும்பத்தினருடன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.. அங்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடனும் செலுத்தினார்.
