Month: February 2025

கோவில்பட்டி

மாவட்ட அளவிலான கபடி போட்டி; கவுன்சிலர் கவியரசன் தொடங்கி வைத்தார்

கோவில்பட்டி காமராஜர் நகர் கருமாரியம்மன் கோவில் திடலில் ப்யூசர் பைட்டர் சார்பில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.  போட்டியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் எம்ஆர்வி கவியரசன் கலந்து கொண்டு போட்டியை தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் கார்த்திக், […]

கோவில்பட்டி

மத்திய பட்ஜெட்டில் தீப்பெட்டி தொழிலுக்கு வரிச்சலுகை இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது; கோவில்பட்டி சேதுரத்தினம்

மத்திய  பட்ஜெட் குறித்து கோவில்பட்ட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க முன்னாள் செயலாளர் சேது ரத்தினம் கூறியதாவது:- மத்திய பட்ஜெட்டில் தீப்பெட்டி தொழிலுக்கு எந்தவிதமான வரிச்சலுகையும் அறிவிக்கப்படவில்லை.மேலும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையும்  உயர்த்தப்படவில்லை. தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான பொட்டாசியம் குளோரைடுக்கு  பொட்டாஷ்  என்ற வேதிப்பொருள் தேவை. விவசாயத்திற்கு மானிய விலையில் பொட்டாஷ் வழங்கப்படுவது போல தீப்பெட்டி தொழிலுக்கும் பொட்டாஷ்  மானிய விலையில் வழங்கினால் உற்பத்தி செலவு குறையும்.. மத்திய அரசின் […]

சினிமா

“சித்தா” பட இயக்குநர் அருண் குமார் திருமணம்

2014 ம் ஆண்டு வெளியான பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தை இயக்கி எஸ்.யு அருண் குமார் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். இப்படம் பல திரைப்பட விழாக்களில் வெளியாகி மக்களின் மனதை வென்றது. 6 தமிழ்நாடு மாநில அரசு விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு சேதுபதி திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் விஜய் சேதுபது மற்றும் ரம்யா நம்பீசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இப்படம் மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. மீண்டும் 2019ம்  ஆண்டு […]

சினிமா

“யாரும் செய்ய முடியாததை நான் செய்துள்ளேன், எனக்கு திமிரு அதிகமாதான் இருக்கும்” –

தேவராஜ்-மோகன் இயக்கத்தில் 1976 ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். 35 நாட்களில் சிம்பொனியை உருவாக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இவர் தற்பொழுது வாலியண்ட் சிம்பனி என்னும் […]

சினிமா

சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான ‘பறந்து போ’

பிரபல இயக்குனர் ராம் தற்போது ‘பறந்து போ’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது. முழுக்க காமெடி பின்னணியில் இப்படத்தினை உருவாக்கி வருகிறார் இயக்குனர் ராம். ஒரு பிடிவாதமாக இருக்கும் சிறுவனுக்கும் பணம் கஷ்டத்தில் இருக்கும் அவனது தந்தைக்கும் ஒரு […]