நிலத்தடி நீர் மாசு அதிகரிப்பு… கட்டுப்படுத்துவது எப்படி ?

பொதுவாக 40ஆண்டுகளுக்கு முன்னதாக கிராமப்புறங்களில் ஓடை கண்மாய் தண்ணீரை பருகிய காலத்தில் ஓரு பழமொழி உண்டு ” தாயை தள்ளி வைத்தாலும் தண்ணீரை தள்ளாதே ” என்று இன்றைய நிலை அப்படியே மாறிவிட்டது
செம்பில் தண்ணீர் குடித்தது போய் சுத்திகரிக்கப்பட்ட மினரல் வாட்டரை வாங்கி பருகிறோம் அந்த அளவுக்கு நிலத்தடி நீரில் மாசு படிந்த நிலையில் உள்ளது.
நிலத்தடி நீர் மாசுபடுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும்கூட முக்கியமான காரணங்களை பார்ப்போம்.
1) நிலத்தடி நீரின் மாசுபாட்டுக்கு புவிசார் செயல் முறைகள் ( GEOGENIC PROCESS)
2) ஆக்சினேற்றம் மற்றும் நிலத்தடி நீரில் நிகழும் வேதியியல் மாற்றங்கள்
நிலத்தடி நீர் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்கள் வரிசையில் ராஜஸ்தான் முதலிடத்திலும் 49% , அடுத்த படியாக கர்நாடகா 48% , தமிழகம் 37% மகாராஷ்டிரா 35% தெலுங்கானா 27% நிலத்தடி நீரில் நைட்டிரேட் உள்ளது
கடந்த 2017முதலே , நிலத்தடி நீரில் நைட்டிரேட் அளவுகள் அதிகரித்துள்ளன இதற்கு முக்கிய காரணம் இந்தியவிவசாயிகள் தங்களுடைய நிலங்களுக்கு போட்டி போட்டு கொண்டு தழைசத்து உரமான யூரியா, அம்மோனியம் நைட்டிரேட் , கால்சியம் நைட்டிரேட் ( CAN ) போன்ற ரசாயன உரங்களை இடுவது தான் .
இந்தியாவில் நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமான நைட்டிரேட் செறிவு கொண்ட 15மாவட்டங்களில் , தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் 4வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் 29மாவட்டங்களில் உப்பு தன்மையும் மின் கடத்தும் திறன் (EC ) 3000MICROMM / செ.மீ க்கு மேலும் 32மாவட்டங்களில் நைட்டிரேட் 45.மி.கி / லிட்டருக்கு மேலும் , 16மாவட்டங்களில் இரும்பு ( IRON) 1மி.கி / லிட்டருக்கு மேலும் உள்ளதாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் கணக்கிட பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் நைட்ரேட் , யூரேனியம் , குளோரைடு நிலத்தடி நீரில் மாசுபடுவதை கணக்கிட்டு அவற்றிற்கான தடுப்பதற்கான போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் நீர் மாசு பாட்டிற்கான கழிவுகளை ( ரசாயன கழிவுகள், சாய கழிவுகள் , காகித ஆலை கழிவுகள் ) சுத்திகரிக்கப்பட்டு மறு சுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும் .மாசு கட்டுபாட்டுவாரியம் இதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
நிலத்தடி நீரில் ஆர்சானிக் புளூரைடு பை கார்பனேட் குளோரைடு அதிகமாக உள்ளது அவற்றை தொடர்ந்து பயன்படுத்தினால் ,ரத்த நாளங்கள் விரிவடைந்து இதய துடிப்பு அதிகரிக்கும் தலைவலி மயக்கம் உண்டாகும்
சின்ன குழந்தைகள் பருகினால் BLUE BABY SYNDROME என்ற நோய் உண்டாகும். எனவே சுத்திகரிக்கப்பட்ட பாதுகாக்க பட்ட குடிநீரை பருகுவோம்.
விவசாயத்தில் என்ன பாதிப்பு உண்டாகும்?
அதிகமாக நிலத்தில் உப்பு படிவதால் ,பயிர் வளர்ச்சி குன்றி மகசூல் பாதிக்கும் நில வளமும் பாதிக்கும். மண்ணின் தன்மை மாறுபடும்.
அக்ரி சு.சந்திர சேகரன் வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை.
