Month: January 2025

ஆன்மிகம்

20 வகை பிரதோஷங்கள்

சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேஷம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது. குறிப்பாக ஜாதகத்தில் மதி [சந்திரன்] நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும் [புத்தியும் நன்றாகும்] ]மொத்தம் 20 […]

பொது தகவல்கள்

தை அமாவாசை தர்ப்பணம்

வருடத்தில் வரும் மிக முக்கியமான அமாவாசைகளில் ஒன்று தை அமாவாசை  ஆகும். உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை இது என்பதால் இது தவற விடக் கூடாத மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. வருடத்தில் வரும் மற்ற 23 அமாவாசைகளில் விரதம் இருந்து, முன்னோர்களை வழிபட முடியாவிட்டாலும் இந்த ஒரு அமாவாசை அன்று மட்டும் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் வருடம் முழுவதும் அமாவாசை விரதம் இருந்து முன்னோர்களை வழிபட்ட பலன் கிடைக்கும். அதோடு நாம் செய்த […]

சினிமா

‘ஜெயிலர் 2’ ஆங்கிலத்திலும் வெளியாகிறதா?

கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சமீபத்தில் ஜெயிலர் 2 படத்திற்கான அறிவிப்பு டீசர் வெளியாகி வைரலானது. தற்போது ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருவதால் ஏப்ரல் மாதம் ஜெயிலர்  2 படப்பிடிப்பில் இணைவார் என்று தெரிகிறது. ஜெயிலர் 2 […]

சினிமா

‘இனிமேல் சவாலான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்’ – சமந்தா

2010-ம் ஆண்டு வெளியான ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. அடுத்து ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடித்தார். தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் கடைசியாக நடித்தார். இந்நிலையில் நீண்ட நாட்களாக சமூகவலைதளத்தில் இருந்து ஒதுங்கி இருந்த சமந்தா, சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்வில் பேசினார். அதில், இனிமேல் தனது படங்கள் எப்படியிருக்கும் என்பதை தெளிவுபடுத்தினார். அவர் கூறுகையில், ‘தொடர்ந்து படங்களில் நடிப்பது ரொம்ப சுலபம். ஆனால் ஒவ்வொரு படத்தையும் […]

கோவில்பட்டி

கயத்தாறில் சிறுமியர்களுக்கான மாவட்ட சாம்பியன்ஷிப் கபடிபோட்டி

கோவில்பட்டி கயத்தாறில் சிறுமியர்களுக்கான மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டி நடத்தப்பட்டது,. தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ போட்டியை தொடங்கி வைத்தார். பல்வேறு அணிகள் மோதின. இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற அணிகள் மோதியதில் வெற்றி பெற்ற அணிக்கு  பரிசு தொகை மற்றும் கோப்பையை கடம்பூர் ராஜு வழங்கினார்/ இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்டம் அமெச்சூர் கபாடி கழகம் செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் எம்ஆர்வி […]

கோவில்பட்டி

மக்கள் நலம் அறக்கட்டளை சார்பில் சமூக சேவகர்களுக்கு விருது

கோவில்பட்டி மக்கள் நலம் அறக்கட்டளை சார்பாக குடியரசு நாள் விழா, மற்றும் மக்கள் சேவகர்களுக்கான பாராட்டு விழா கோவில்பட்டி ஜி.கே.எஸ்..மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு மக்கள் நலம் அறக்கட்டளை தலைவர் மாரிமுத்துக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கணேஷ் குமார், பொருளாளர் முகமது ராபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி .கற்குவேல் ராஜன் வரவேற்று பேசினார்.கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க. தமிழரசன் சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, தமிழ்நாடு காமராஜர் பேரவை நெஞ்சில் குமார், ஆகியோர் […]

கோவில்பட்டி

கி.ரா நினைவரங்கில் நூல் வெளியீடு மற்றும் ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் கோவில்பட்டி கிளை சார்பில் பொன்விழா கொண்டாட்டத்தின் எட்டாம் நிகழ்வாக நூல் வெளியீட்டு விழா மற்றும் நூல் ஆய்வு குறித்து கூட்டம் கி.ரா நினைவரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் கிளை தலைவர் அபிராமி முருகன் தலைமை தாங்கினார்..கிளைச் செயலாளர் வேலுச்சாமி வரவேற்புரையாற்றினார். சாகித்திய பாலபுரஸ்கர் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர் தொடக்க உரையாற்றினார். இளம் எழுத்தாளர் சால்வடார் எழுதியுள்ள “கடவுளை கொலை செய்தவன்” எனும் நூலை […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தியாகி சங்கரலிங்கனார் பிறந்தநாள் விழா

சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கலிங்கனார் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்விற்கு பாண்டியனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் வழக்கறிஞர் சீனிராஜ் தலைமை தாங்கினார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் கருப்பசாமி,நிர்வாகி நல்லையா,நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், திமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட […]

பொது தகவல்கள்

இதயக் கோளாறுகளை தடுக்கும் முள்ளங்கி

முள்ளங்கி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பெரும்பாலான மக்கள் முள்ளங்கியை சாலட் அல்லது சாம்பாரில் போட்டு உட்கொள்கிறார்கள். முள்ளங்கியைப் போலவே, முள்ளங்கி விதைகளும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், முள்ளங்கி விதையில் வைட்டமின் சி, புரதம், கால்சியம் போன்ற குணங்கள் உள்ளன, அவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். மறுபுறம், முள்ளங்கி சாப்பிட்டால் இதயக் கோளாறுகள் வராது. முள்ளங்கி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம். […]