Month: November 2024

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை: கோவில்பட்டியில் இரவு முழுவதும் தூறல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதற்கிடையே தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் பூமத்திய ரேகையையொட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (புதன்கிழமை) புயலாக வலுப்பெறக்கூடும். அடுத்த 2 நாட்களில் மேலும் நகர்ந்து இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழகத்தில் பல […]

தூத்துக்குடி

3 மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்’; தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டா மாவட்டங்களை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது,. சென்னையில் இருந்து 830 கி.மீ. தொலைவிலும், நாகையில் இருந்து 630 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் காற்றழுத்தத் […]

கோவில்பட்டி

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் வலியுறுத்தல்

கோவில்பட்டியில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயது அடைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், வன காவலர்கள், பட்டு வளர்ச்சித்துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். காப்பீடு திட்டத்தின் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். டிரேக்கிங் சிஸ்டத்தை அமல்படுத்த வேண்டும். கமுட்டேஷன் பிடித்தம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த்துறையில் பணியிடங்கள் கலைக்கப்படுவதை தவிர்க்க வலியுறுத்தி கோவில்பட்டி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையை களைந்து ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடர்பாக தெளிவுரையை வருவாய் நிர்வாக ஆணையர் வெளியிட வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்சரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயம் […]

செய்திகள்

மதுரை அதிமுக கூட்டத்தில் அடிதடி கைகலப்பு: முன்னாள் அமைச்சர்கள் முன் மோதிகொண்ட தொண்டர்கள்

அதிமுக கிளை,வார்டு, வட்ட கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்ய ‘கள ஆய்வு குழு’ ஒன்றை அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார். அதன்படி மதுரை மாநகர அதிமுக செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து கள ஆய்வு கூட்டம் மதுரை சந்தை பேட்டை பகுதியிலுள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக கள ஆய்வு குழுவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, […]

செய்திகள்

பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை விழ்த்தி இந்தியா அபார வெற்றி

பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸ் முறையே இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணி 150, 104 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் மற்றும் கோலியின் சதத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 487 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளர் செய்தது. 534 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இறுதியில் அனைத்து […]

செய்திகள்

கூகுள் மேப் வழிகாட்டிய பாதையில் சென்ற போது விபரீதம்: கட்டிமுடிக்கப்படாத பாலத்தில் இருந்து

உத்தரப்பிரதேசம் மாநிலம் பருகாபாத்தை சேர்ந்த 3 பேர் திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக, குருகிராமில் இருந்து பதாவுன் மாவட்டத்தில் உள்ள பரேலிக்கு காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். திருமணம் நடக்கும் இடத்திற்கு செல்ல வழி தெரியாததால் கூகுள் மேப் காட்டிய வழியில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, பரித்பூர் என்னும் இடத்தில் செல்லும்போது கூகுள் மேப் மேம்பாலம் ஒன்றில் ஏறி செல்லும்படி வழியை காட்டியுள்ளது. அது சரியான வழி என நம்பி சென்ற மூவரும் அந்த பாலத்தில் சென்றுள்ளனர். ஆனால், அது […]

சினிமா

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா காதல் உறுதியானது

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்பட்டார் விஜய் தேவரகொண்டா. கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இதனைத் தொடர்ந்து, டியர் காம்ரெட் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்தனர். இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து, அல்லு அர்ஜூன், கார்த்தி, விஜய் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பான் இந்தியா படங்களில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.இதற்கிடையே, விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாக […]