பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை விழ்த்தி இந்தியா அபார வெற்றி
பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸ் முறையே இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணி 150, 104 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் மற்றும் கோலியின் சதத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 487 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளர் செய்தது. 534 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியா அணி 238 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. வெற்றிக்காக போராடிய ஆஸ்திரேலியா வீரர் ஹெட் அதிகபட்சமாக 89 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக பும்ரா, சிராஜ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு இது முக்கியமான வெற்றியாக இருக்கும்.