• April 19, 2025

Month: November 2024

செய்திகள்

வன்முறையை தடுக்க மசூதி ஆய்வை உடனே நிறுத்துங்கள்: அமித்ஷாவுக்கு திருமாவளவன் கடிதம்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஜாமா மஸ்ஜித் மசூதி ஒன்று உள்ளது. மிகவும் பழமையான இந்த மசூதி, இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சம்பல் மசூதி விவகாரத்தில் நடைபெற்ற வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனா். இதனால் அம்மாநிலம் முழுவதும் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் சம்பலில் உள்ள ஜாமா மஸ்ஜித்தின் கீழே இந்து கோவில் இருந்ததா என்பதை […]

சினிமா

உண்மையான சினிமா இதுதான்: சொர்க்கவாசல் படத்தை பாராட்டிய செல்வராகவன்

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சொர்க்கவாசல்’. ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் செல்வராகவன், நட்டி, சானியா ஐயப்பன், பாலாஜி சக்திவேல், கருணாஸ், ஹக்கீம் ஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தணிக்கை குழுவால் ஏ சான்றிதழ் பெற்ற இப்படம் திரையரங்குகளில் நேற்று வெளியான நிலையில், படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகிறது. இந்நிலையில் […]

செய்திகள்

பிரபல கேமிங் நிறுவனம் புகார்: கூகுள் மீது விசாரணை நடத்த சிசிஐ உத்தரவு

பிரபல கேமிங் நிறுவனமான வின்ஸோ அளித்த புகாரின் பேரில், கூகுள் நிறுவனத்தின் மீது விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் கேமிங் நிறுவனமான வின்ஸோ, நம்பகத்தன்மை விதியை மீறியதாக கூகுள் மீது இந்திய போட்டி ஆணையத்தில் (காம்பெட்டிஷன் கமிஷன் ஆப் இந்தியா) புகார் அளித்தது. அதாவது, கூகுள் ப்ளே ஸ்டோரில் பட்டியலிடப்படும் பணம் சார்ந்த ஆன்லைன் கேம் ஆப்களில், வின்ஸோ ஆப் கட்டுப்படுத்தப்படுவதாகவும், ஆன்ட்ராய்டு செல்போன்களில் வின்ஸோ ஆப் குறித்து காட்டப்படும் ஆதாரமற்ற […]

செய்திகள்

ஓபிஎஸ் மீதான சொத்துகுவிப்பு வழக்கு – ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடை

ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கில், மறு விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2001–2006 காலக்கட்டத்தில் வருவாய் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக 1கோடியே 77 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, ஓ.பன்னீர்செல்வம், அவரது தம்பி ஓ.ராஜா, மகன் ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர் மீது 2006-ஆம் ஆண்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. ஆனால் அடுத்த அதிமுக ஆட்சி காலத்தில் 2012-ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கில் […]

செய்திகள்

இந்திய அணி வீரர் விராட் கோலியை பாராட்டிய ஆஸ்திரேலியா பிரதமர்

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் என்பது தேசிய விளையாட்டாகும். ஆஸ்திரேலியாவுக்கு எந்த பெரிய அணிகளும் கிரிக்கெட் விளையாட சென்றால் அவர்களை அந்நாட்டு பிரதமர் வரவேற்று தேநீர் விருந்து அளிப்பது என்பது அந்நாட்டு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வரும் 6-ம் தேதி அடிலெய்ட் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக 2 நாட்கள் கொண்ட பகலிரவு பறிற்சி போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் மோத உள்ளது. இந்த ஆட்டம் […]

சினிமா

மிகவும் பெருமையாக உள்ளது: மகாராஜாவிற்கு வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மகாராஜா. இத்திரைப்படம் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக உருவானது. குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியிருந்தார். கடந்த ஜுன் 14-ம் தேதி வெளியான இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படம் ஓடிடி வெளியீட்டிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான இந்திய படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மகாராஜா 2 […]

செய்திகள்

மராட்டிய முதல்வர் யார் என்பது இன்னும் ஓரிரு நாள்களில் தெரிவிக்கப்படும்: ஏக்நாத் ஷிண்டே

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, மராட்டிய மாநிலத்தின் புதிய முதல்வர் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மராட்டியத்தில் பாஜக, சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட மகாயுதி கூட்டணி அமோக வெற்றிப்பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ள நிலையில், புதிய முதல்வர் யார் என்பது குறித்த ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே, […]

சினிமா

நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ டீசர்-யூடியூபில் தொடர்ந்து முதலிடம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர், தன்னுடைய 62-வது படமான ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்குடன் இணைந்து அர்ஜூன், ஆரவ், திரிஷா, ரெஜினா கெஸான்ட்ரா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். அஜர்பைஜான் உள்ளிட்ட பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரடெக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ், மலையாளம், தெலுங்கு, […]

செய்திகள்

ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை: மசோதா நிறைவேற்றம்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்ட மசோதாவை ஆஸ்திரேலியா அரசு கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றியுள்ளது. உலகத்திலேயே முதல் முறையாக 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் இந்த சட்ட மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. சிறுவர்கள் லாக் இன் செய்வதை தடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கு 32 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் […]

செய்திகள்

டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய கோரி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய மத்திய சுரங்க துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார். மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு உரிமம் வழங்கியதால், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டமான நிலைமையை குறிப்பிட்டு, இந்தியப் பிரதமர் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு ஒன்றிய அரசு வழங்கியுள்ள […]