நாடு முழுவதும் வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அண்மையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு 3% வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து, டாஸ்மாக் கடை ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் என பலருக்கும் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 11 ஆண்டுகளில் முதல் […]
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை நாளை அக்டோபர் 30-ம் தேதி நடைபெறுகிறது. ராமநாதபுரம், மதுரை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேவர் ஜெயந்தியின் பொழுது அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்த வருகை தருவதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை […]
சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே 14 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் ரெயில் சேவை இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 2 வழித்தடங்களில் மின்சார ரெயில்களும், ஒரு வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில்கள் கடற்கரை – எழும்பூர் இடையே செல்லும்போது அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் 4.5 கி.மீ தொலைவுக்கு ரூ.279 […]
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றார். ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், அதில் ஒன்றை தியாகம் செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி ஆகும். இதையடுத்து ராகுல் காந்தி வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானது. இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம், வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்தது. […]
‘பாதம் பாதுகாப்போம் திட்டத்தின்’ கீழ் அரசு மருத்துவமனைகளில் `பாத மருத்துவ மையங்கள்’ அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- நீரிழிவு நோயாளிகளின் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு பார்வை பயணத்தில் “பாதம் பாதுகாப்போம் திட்டம்” அரசின் ஒரு முன்னோடித் திட்டமாகும். இத்திட்டத்தினை அரசு மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் நீரிழிவு நோய் பாத பாதிப்புகளை தவிர்ப்பதற்கும், நீரிழிவு பாத பாதிப்புகளுக்கான மருத்துவத்தின் மூலமாக, கால் […]
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வேட்டையன்’. இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு, மாஸ் மொமண்ட் என பக்கவாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஞானவேல்.பகத் பாசில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் கலக்கியுள்ளார். இத்திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் மனசிலாயோ […]
நடிகர் விஜய் கட்சி மாநாடு முடிந்துவிட்டாலும் தவெக மாநாட்டு திடலுக்கு பலரும் சென்று செல்பி போட்டோ, வீடியோ எடுத்து மகிழ்கின்றனர். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நேற்று அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சாலையில் நடந்தது. தமிழகம் எங்கும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ஆர்ப்பரித்தனர். கூட்டம் முடிந்து, அனைவரும் சாரை, சாரையாக அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு பயணமாகிவிட்டனர். தொண்டர்கள் சென்றுவிட்டாலும் இப்போதும் அங்கு கூட்டம் வந்து […]
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதை எதிர்கொள்ளும் வகையில், ஆளுங்கட்சியான திமுக பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இதுதவிர, திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டங்களை பிரித்து கூடுதல் மாவட்டங்களை உருவாக்குவது, அதற்கு நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதுஇந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டசபை தொகுதிகளின் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை முதல்-அமைச்சர் […]
கோவில்பட்டி அருகே எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் அந்தோணி திலிப் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது எப்போதும்வென்றான் அருங்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கார்த்திக் (வயது 27) என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையை சோதனை செய்தனர். அங்கு ஏழாயிரம்பண்ணை சங்கரபணியாபுரம் பகுதியைச் சேர்ந்த \கருப்பசாமி (38), சதீஷ்குமார் (27) தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த பிரதீப்குமார் (29) ஆகியோர் அரசு அனுமதி மற்றும் பட்டாசு தயாரிப்பதற்கான உரிமமன்றி […]