மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
நாடு முழுவதும் வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அண்மையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு 3% வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.
இதையடுத்து, டாஸ்மாக் கடை ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் என பலருக்கும் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 11 ஆண்டுகளில் முதல் முறையாக நான் எக்சிகியூட்டிவ் பணியாளர்களுக்கு ரூ.15,000 போனஸ் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், சி.ஐ.டி.யூ. , சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சங்கம் இணைந்து மெட்ரோ ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது.