பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா: மு.க.ஸ்டாலின் இன்று மதுரை புறப்படுகிறார்
![பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா: மு.க.ஸ்டாலின் இன்று மதுரை புறப்படுகிறார்](https://tn96news.com/wp-content/uploads/2024/10/4901763-mk-850x560.webp)
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை நாளை அக்டோபர் 30-ம் தேதி நடைபெறுகிறது.
ராமநாதபுரம், மதுரை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேவர் ஜெயந்தியின் பொழுது அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்த வருகை தருவதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை பசும்பொன்னில் நடைபெற உள்ள முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையில் பங்கேற்க உள்ளார். இதற்காக முதலமைச்சர் விமானம் மூலம் இன்று இரவு 7 மணிக்கு மதுரைக்கு செல்கிறார்.
முதலமைச்சர் வருகையையொட்டி மதுரை மாநகர், மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று மற்றும் நாளை டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் கிராமத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)