நடிகர் விஜய் கட்சி மாநாடு முடிந்தும் வரும் மக்கள்: தவெக திடலில் செல்பி எடுத்து மகிழ்ச்சி

 நடிகர் விஜய் கட்சி மாநாடு முடிந்தும் வரும் மக்கள்: தவெக திடலில் செல்பி எடுத்து மகிழ்ச்சி

நடிகர் விஜய் கட்சி மாநாடு முடிந்துவிட்டாலும் தவெக மாநாட்டு திடலுக்கு பலரும் சென்று செல்பி போட்டோ, வீடியோ எடுத்து மகிழ்கின்றனர்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நேற்று அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சாலையில் நடந்தது. தமிழகம் எங்கும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ஆர்ப்பரித்தனர். கூட்டம் முடிந்து, அனைவரும் சாரை, சாரையாக அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு பயணமாகிவிட்டனர்.

தொண்டர்கள் சென்றுவிட்டாலும் இப்போதும் அங்கு கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. மாநாட்டுக்கு நேரடியாக சென்று பங்கேற்க முடியாதவர்கள், அவ்வழியே வாகனங்களில் செல்பவர்கள் என பலரும் ஆர்வமுடன் மாநாட்டு திடலை வழியில் கண்டு ஆச்சரியம் அடைகின்றனர்.

இது விஜய் கட்சி மாநாடு நடந்த இடம் என்று அடையாளம் கண்டு பேசும் பொது மக்கள், ஆர்வத்துடன் அங்கே சென்று போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

மாநாட்டு முகப்பு, மேடை, கட் அவுட்டுகள் என விரும்பிய இடத்துக்கு சென்று செல்பி போட்டோ எடுத்து அசத்துகின்றனர். மாநாட்டுக்கு வர இயலாத தொண்டர்களும் அங்கு சென்று போட்டோ, வீடியோகளை எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்கின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *