தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பொது துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்., இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திட நீலகிரி மாவட்டத்தின் வன பகுதிகள் மற்றும் பிற பொருத்தமான பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலைவாய்ப்பு அளிப்பதை நோக்கமாக […]
சிவகார்த்திகேயன் தனது 21-வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். அமரன் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகியுள்ளது. படத்தின் பாடல்கள், ராணுவ பின்னணி என ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள், சாய் பல்லவியுடான காதல் காட்சிகள் என டிரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு வாயிலாக விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றன. தீபாவளி வெளியீடாக […]
தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி வியாழ கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை சொந்த ஊர் சென்று கொண்டாடும் மக்களின் வசதிக்காக தீபாவளி மறுநாள் வெள்ளி கிழமை விடுமுறை நாளாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது. தொடர்ந்து 4 நாள் விடுமுறை கிடைக்கும் என்பதால் மக்களின் வசதியை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் […]
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனிடையே திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ராகவா லாரன்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ராகவா லாரன்ஸ்., லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் ‘பென்ஸ்’ படத்தில் நடிக்கவுள்ளார். இது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 2 -வது படமாகும். அதனையடுத்து வெங்கட் மோகன் இயக்கத்தில் ‘ஹண்டர்’, துரை செந்தில் குமார் இயக்கத்தில் ‘அதிகாரம்’ […]
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் பெங்களூரு மற்றும் புனேவில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி நவம்பர் 1-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இந்நிலையில், நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் இலங்கை தொடரின் போது அடைந்த காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான முதல் […]
துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சி மற்றும் எந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும், திமுக சின்னத்துடன் டி-ஷர்ட் அணிந்து செல்வதை பார்க்கலாம். அவர் சட்டை அணிந்து வரவேண்டும் என்று அதிமுக ஏற்கனவே வலியுறுத்தி வருகிறது. உதயநிதி ஸ்டாலின் சட்டை அணிந்து வரவும், அரசு நிகழ்ச்சிகளில் முறைப்படியான ஆடை குறியீட்டை பின்பற்ற கோரியும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சென்னையை சேர்ந்த வக்கீல் சத்யகுமார் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார். 2019 ஜூன் […]
பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளியை ஒட்டி முன்கூட்டியே சம்பளம் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- அரசு கல்லூரிகளில் கவுரவ உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்கவும்; பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளியையொட்டி முன்கூட்டியே சம்பளம் வழங்கவும் திரு. ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்தல். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பள்ளி […]
உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் என விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் வாழ்த்து தெரிவித்தார். கடந்த ஜூன் 7-ம் தேதி இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய 2 வீரர்களுடன் ஸ்டார்லைனர் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தது. அடுத்த 8 நாளில் சுனிதா உட்பட 2 வீரர்களும் ஸ்டார்லைனர் மூலம் பூமிக்கு திரும்ப வேண்டிய நிலையில், விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டது. […]
ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டிருக்கும் மேத்யூ வேட் இதுவரை 36 டெஸ்ட் போட்டிகள், 97 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலிய ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் அவருக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. 2024-ம் ஆண்டு டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற அவர் ஆர்வமாக இருந்தபோதும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்நிலையில்தான் மேத்யூ வேட் சர்வதேச […]
அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20 நாட்களாகியும் இன்னும் வழங்கப்படாத தீபஒளி ஊக்கத்தொகை இன்றைக்குள் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு தீப ஒளி திருநாளையொட்டி 20% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 10-ஆம் தேதி அறிவித்திருந்தார். அதன் பிறகு இன்றுடன் […]