தீபாவளி பண்டிகை: பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை
![தீபாவளி பண்டிகை: பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை](https://tn96news.com/wp-content/uploads/2024/10/half-day-850x560.webp)
தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி வியாழ கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை சொந்த ஊர் சென்று கொண்டாடும் மக்களின் வசதிக்காக தீபாவளி மறுநாள் வெள்ளி கிழமை விடுமுறை நாளாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது. தொடர்ந்து 4 நாள் விடுமுறை கிடைக்கும் என்பதால் மக்களின் வசதியை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (30.10.2024) முற்பகல் மட்டும் செயல்படும், பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இன்றே சிறப்பு பஸ்களும் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாளை சொந்த ஊர் செல்லும் பயணிகள் பலரும் ஆயத்தமாகி வரும் நிலையில், பெற்றோர்களின் வசதியை கருத்தில் கொண்டு நாளை அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)