ஓய்வை அறிவித்தார் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீர்ர் மேத்யூ வேட்

 ஓய்வை அறிவித்தார் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீர்ர் மேத்யூ வேட்

BIRMINGHAM, ENGLAND – JULY 10: Matthew Wade looks on during the Australia nets practice at Edgbaston on July 10, 2019 in Birmingham, England. (Photo by David Rogers/Getty Images)

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டிருக்கும் மேத்யூ வேட் இதுவரை 36 டெஸ்ட் போட்டிகள், 97 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலிய ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் அவருக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. 2024-ம் ஆண்டு டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற அவர் ஆர்வமாக இருந்தபோதும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்நிலையில்தான் மேத்யூ வேட் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஓய்வை அறிவித்திருக்கிறார்.

அதேநேரம் அவர் ஓய்வை அறிவித்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக உடனடியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய அணி தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக மேத்யூ வேட் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய மேத்யூ வேட்,

“நான் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுகிறேன். ஒவ்வொரு தொடரின் போதும், ஒவ்வொரு உலக கோப்பையின் போதும் இதை பற்றி நான் விவாதித்துக் கொண்டே இருந்தேன். கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக இது தொடர்ந்தது. தேர்வு குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி மற்றும் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் ஆகியோருடன் கடந்த ஆறு மாதங்களாக பேசி கொண்டு இருக்கிறேன். கடந்த உலக கோப்பையில் எனக்கு இடம் அளிக்கப்படாத நிலையில் நாங்கள் அது பற்றி மிகவும் வெளிப்படையாக பேசினோம். நான் எனது கேரியரில் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை பற்றி புரிந்து கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *