தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘பென்ஸ்’ படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளர். லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 2-வது படமாக ‘பென்ஸ்’ படம் உருவாகிறது. ‘ரெமோ, சுல்தான்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய பாக்யராஜ் […]
நீண்ட நாள்களுக்குப் பிறகு ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘என். ஜி. கே’, ‘நானே வருவேன்’ படங்களை இயக்கியவர், சமீபகாலமாக திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் இயக்கிய ‘ராயன்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தான் நினைக்கும் விஷயங்களைப் பகிர்ந்து வரும் செல்வராகவன், தற்போது தமிழில் பேசுவதை அவமானமாகக் கருத வேண்டாம் என்று காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் பேசி இருப்பதாவது:- , “தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்: ‘மெல்லத் தமிழ் […]
கோவில்பட்டி சைவ வேளாளர்கள் சங்கத்தின் 55-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்கத்தலைவர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் நடராஜன், பொருளாளர் ஆடிட்டர் பாலசுப்பிரமணியன், தணிக்கையாளர் சுந்தரம், துணைத்தலைவர் கண்ணன்,துணைச்செயலாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சங்கத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.. சங்க தலைவர் தலைவர் தெய்வேந்திரன், சங்க வளர்ச்சி, வருங்கால திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில், ஆண்டறிக்கை, மறைந்த உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது, 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் […]
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்ததில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது. இதனை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக தெரிவித்ததுடன், முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசு மீது குற்றச்சாட்டையும் கூறினார். சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார். இந்த விவகாரம் பக்தர்கள் மற்றும் நாடு முழுவதும் […]
கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி கிராமத்தில் அதிமுக மேற்கு ஒன்றியம் சார்பில் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றியசெயலாளர் அழகர்சாமி ஏற்பாட்டில், நடந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி அதிமுக நகரச்செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில், ஊத்துப்பட்டி கிராமத்தில் அதிமுக கொடியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்றஉறுப்பினர் கடம்பூர் ராஜூ ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கடம்பூர் ராஜு வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, தலைமைக்கழக பேச்சாளர் மூர்த்தி,வழக்கறிஞர் அணி மாவட்ட […]
கோவில்பட்டி ராஜீவ் நகர் 4-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 50). பொறியாளர். இவர், கடந்த 20-ந் தேதி பாரதிநகர் மேட்டு தெருவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு காரில் சென்றார். அங்கிருந்து இரவு 8 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலை அருகே வந்த போது 10 பேர் கும்பல் திடீரென்று காரை வழிமறித்தனர். அவரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டிய அவர்கள் , ராஜ்குக்மாரிடம் இருந்து செல்போன், பவர் […]
கேரளாவை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், தேனியில் ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு செல்வதற்காக காலை 7 மணிக்கு மாணவி தேனி பஸ் நிலையத்துக்கு வந்தார். . அப்போது அங்கு வந்த 6 பேர், மாணவியை மடக்கி காரில் கடத்தி சென்று ஒரு இடத்தில கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே அந்த மாணவியை இறக்கி விட்டுவிட்டு, அந்த நபர்கள் சென்றுவிட்டனர். 6 […]
சேலம் மாவட்டம் செங்கரடு கிராமத்தைச் சேர்ந்த எம்.மூர்த்தி சென்னை ஐகோட்டில் சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன். வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம் ஆகியோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான மனுவில் மூர்த்தி கூறி இருந்ததாவது:- , “நான் பஞ்சாயத்து செயலாளர் பதவிக்கு கடந்த 2004-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு, சேலம் மாவட்டத்தில் பல்வேறு பஞ்சாயத்துக்களில் பணியாற்றியுள்ளேன். பஞ்சாயத்து நிதியை தவறாக கையாண்டதாக என்னை கடந்த 2017-ம் ஆண்டு […]
கோவில்பட்டியில் விடுதலை போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் சவுபாக்யா மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு சீனிவாசா மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் என்.டி.சீனிவாசன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.எஸ்..ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், இந்திய கலாச்சார நட்புறவுக்கழகத்தின் மாநில செயலாளர் க.தமிழரசன், மாவட்ட துணைசெயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கலாச்சார நட்புறவுக்கழகத்தின் மாநில குழு உறுப்பினர் ஜெயஸ்ரீ கிருஸ்டோபர் வரவேற்று பேசினார். […]