• April 19, 2025

நர்சிங் மாணவியை காரில் கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை

 நர்சிங் மாணவியை காரில் கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை

கேரளாவை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், தேனியில் ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு செல்வதற்காக காலை 7 மணிக்கு மாணவி தேனி பஸ் நிலையத்துக்கு வந்தார்.

. அப்போது அங்கு வந்த 6 பேர், மாணவியை மடக்கி காரில் கடத்தி சென்று ஒரு இடத்தில  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே அந்த மாணவியை இறக்கி விட்டுவிட்டு, அந்த நபர்கள் சென்றுவிட்டனர்.

6 பேர் கும்பலின்  கொடூர செயலால் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்ட மாணவி, ஆட்டோ பிடித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சென்று, தனக்கு நேர்ந்த கொடூமை  குறித்து போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார்,  நர்சிங் மாணவியை  \திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக  அனுமதித்தனர்.

மேலும் மாணவியை கடத்திய நபர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கினர். இதற்காக திண்டுக்கல் ரெயில் நிலையம் மற்றும் , தேனி பஸ் நிலைய பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *