• February 7, 2025

சைவ வேளாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

 சைவ வேளாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

கோவில்பட்டி சைவ வேளாளர்கள் சங்கத்தின் 55-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்கத்தலைவர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் நடராஜன், பொருளாளர் ஆடிட்டர் பாலசுப்பிரமணியன், தணிக்கையாளர் சுந்தரம், துணைத்தலைவர் கண்ணன்,துணைச்செயலாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சங்கத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.. சங்க தலைவர் தலைவர் தெய்வேந்திரன், சங்க வளர்ச்சி, வருங்கால திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில், ஆண்டறிக்கை, மறைந்த உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது,

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கூட்ட முடிவில்  தணிக்கையாளர் சுந்தரம் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *