• November 1, 2024

Month: August 2024

கோவில்பட்டி

இளையரசனேந்தலில் அதிகாரிகள் கவனம் ஈர்த்த சுவரொட்டிகள்   

கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தலில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்  நடைபெற்றது. இதற்கு பல்வேறு துறை அதிகாரிகள் வருகை தருவார்கள் என்பதால் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நீண்ட கால கோரிக்கையை சுவரொட்டியாக அச்சடித்து இளையரசனேந்தல் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது இருந்தது. இளையரசனேந்தல் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் தெருக்களில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளில் “ தமிழக அரசே ! இளையரசனேந்தல் பிர்காவை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்துடன் தொடர்ந்திடவும், கோவில்பட்டி யூனியனுடன் இணைத்திடவும் உடனே […]

செய்திகள்

கார்‌ பந்தயம் நடத்துவதை விட்டுவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்தவேண்டும்-டி.ஜெயக்குமார்

அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:- கார்ப்பரேட் திமுக அரசே! எத்தனையோ இளைஞர்கள் சரியான உணவின்றி விளையாட இடமின்றி எத்தனையோ இடையூறுகளை கடந்து விளையாட்டுத்துறையின் மூலம் வெளிச்சத்திற்கு வர வெம்பாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர்! விளையாட்டிற்கான உடற்தகுதி இல்லாமல் வாய்ப்புகளை இழந்தோர் ஏராளம்! சாதாரண சாப்பாட்டிற்கே வழி இல்லாத விளையாட்டு வீரர்கள் எங்கிருந்து புரதம்(Protein) நிறைந்த உணவெல்லாம் எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்? கடந்த ஆண்டே கார் ரேஸ் நடத்த திட்டமிட்டு மக்கள் […]

செய்திகள்

உதயநிதி ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் ஆவார் – அமைச்சர் மூர்த்தி

மதுரை லேடி டோக் கல்லூரியில் கல்வி கடன் மேளா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-வணிகவரித்துறையில் சில நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட நிறுவனங்களின் ஜி.எஸ்.டி. எண்ணை மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கிறோம். அவர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். யாரெல்லாம் தொழிலை செய்யாமல் ஜி.எஸ்.டி. நம்பர் வாங்கி வைத்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டை […]

தூத்துக்குடி

தேசிய விளையாட்டான ஆக்கியை மீட்டுக்கொடுப்பதில் நமது மாவட்டமும் பங்கெடுக்க வேண்டும்- ஆட்சியர் க.இளம்பகவத்

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,   தூத்துக்குடி  தருவை விளையாட்டு மைதானத்தில் ஆக்கி விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்தார். வீரர்களுக்கு ஆக்கி  = மட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில்  கூறியதாவது:- இந்த போட்டியில் 4 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் அணிகள் தனிதனியாகப் போட்டியிடபோகிறீர்கள்.   ஆக்கி நமது நாட்டினுடைய தேசிய விளையாட்டு அந்த ஆக்கி விளையாட்டில் நமது நாட்டிற்கு இந்த ஆண்டு ஒரு ஒலிம்பிக் பதக்கம் கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் ஆக்கியென்றால் இந்தியாதான் […]

செய்திகள்

அதிக உறுப்பினர்களை சேர்க்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய் பரிசளிக்கிறார்

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் கட்சியைத் தொடங்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அப்போதே நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு கட்சியின் கொடி, கொள்கைகள் வெளியிடப்படும் என்று அவர் கூறியிருந்தார். அதன்படி நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் தற்போது கட்சி பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் த.வெ.க. கட்சி சார்பாக மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். இதனைத்தொடர்ந்து கடந்த 22-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் […]

சினிமா

பாலியல் புகார்கள்: நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் மீது வழக்குப்பதிவு

கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது. இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.பாலியல் புகார் நடிகர் […]

தூத்துக்குடி

`உங்களைத் தேடி உங்கள் ஊரில்’- ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு 

`உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் நேற்று பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் நட்டாத்தி ஊராட்சி நூலகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார் புதிதாக கட்டப்பட்டு வரும் நியாய விலை கடையின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நட்டாத்தி ஊராட்சி கொம்புக்காரன் பொட்டல் கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார் பெருங்குளம் இரண்டாம் நிலை பேரூராட்சி உண்டியலூர் வடக்கு […]

செய்திகள்

நாகர்கோவில்-சென்னை, மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில்: 31-ந் தேதி தொடக்கம்

நாகர்கோவில்-சென்னை எழும்பூர் மற்றும் மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி வருகிற 31-ந் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்டிரலில் இருந்து மைசூரு, சென்டிரலில் இருந்து கோவை, சென்டிரலில் இருந்து விஜயவாடா, எழும்பூரில் இருந்து நெல்லை மற்றும் கோவை-பெங்களூரு என 5 ரெயில்கள் இயக்கப்படும் நிலையில் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் மற்றும் மதுரை-பெங்களூரு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் `இதயம் காப்போம் முகாம்’ செப்டம்பர் 1-ந் தேதி நடக்கிறது

கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் அமைந்துள்ள ஏ.வி.மேல்நிலைப்பள்ளியில் செப்டம்பர் 1 -ந் தேதியன்று திருநெல்வேலி காவேரி மருத்துவமனை, கோவில்பட்டி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் இதயம் காப்போம் முகாம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை முகாம் நடக்கும். இருதய சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் பங்கேற்று ஒவ்வொருவரையும் பரிசோதனை செய்வர். முதலில் பொதுவான பரிசோதனை, தொடர்ந்து இ.சி.ஜி. பரிசோதனை செய்து இதய நோய் கண்டறியப்படும். தேவைப்படுவோருக்கு எக்கோ டெஸ்ட் […]