• May 21, 2024

Month: April 2024

கோவில்பட்டி

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின் பேரில் கோவில்பட்டி  துணை கண்காணிப்பாளர்  வெங்கடேஷ் மேற்பார்வையில்  மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்  கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர்  செந்தில்குமார் மற்றும் போலீசார் ஆலம்பட்டி மெயின் ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், கோவில்பட்டி கடலைகார தெருவை சேர்ந்த  பாண்டிமணி (30),ரகுபதி (29) மற்றும் மந்திதோப்பு ரோடு பகுதியைச் […]

கோவில்பட்டி

சைக்கிள்,ஸ்கூட்டர் மீது மோதி மிட்டாய் கடைக்குள் புகுந்த கார்; கோவில்பட்டியில் பரபரப்பு

 கோவில்பட்டி மாதாங்கோவில் சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். இன்று காலை பஸ் நிலைய பகுதியிலிருந்து மெயின் ரோட்டில் வந்த ஒரு கார், மாதாங்கோவில் தெரு சந்திப்பில் சில வினாடிகள் நின்றது. பின்னர் அந்த கார், சாலையில் திரும்பியது.அப்போது மெயின் ரோட்டில் இருந்து பஸ் நிலையம் நோக்கி சென்ற ஒரு சைக்கிள் மீது லேசாக இடித்து விட்டு, மாதாங் கோவில் சாலையில் திருப்பத்தில் நின்ற ஒரு ஸ்கூட்டரை இடித்து தள்ளி விட்டு டிரைவரின்  கட்டுப்பாட்டை இழந்த கார், தெரு […]

செய்திகள்

கொடைக்கானலில் அரசியல்வாதிகள் முகாம் ; முதல் அமைச்சர் ஸ்டாலின் 29-ந்தேதி வருகை 

 தமிழ்நாட்டில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்குபடையெடுத்து வருகிறார்கள்.  மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் தற்போது வெயில் ஓரளவு அடித்தாலும் அங்கு ஜில் என்று வீசும் காற்று காரணமாக வெயில் கொடுமை தெரிவதில்லை.  இதன் காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா முடிந்த நிலையில் அரசியல்வாதிகள் பலர் கொடைக்கானலில்  முகாமிட்டு உள்ளனர். அமைச்சர்கள் சிலர் இங்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் வளர்ப்பு நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் நலனை உறுதி செய்வதில் கால்நடை மருத்துவர்களின் பங்கு முக்கியமானதாகும். கால்நடை மருத்துவர்களை கவுரவிக்கும் வகையில் நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமை உலக கால்நடை மருத்துவர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது இதையொட்டி கோவில்பட்டி அரசு கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வளர்ப்பு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது. வளாகத்தை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் எட்வின் தலைமை தாங்கினார்.வனத்துறை அலுவலர்கள் பிரசன்னா, பாலகுமார் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய திருவிழா, கொடியேற்றத்துடன் தொடக்கம் 

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய திருவிழா இன்று (26 4 2024 )வெள்ளி மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா கொடியை காமநாயக்கன்பட்டி பங்குத்தந்தை அருட்திரு அந்தோணி அ.குருஸ் அடிகளார் ,திருச்சி புனித பவுல் குருமடம் அருட்திரு ராஜேஷ் அடிகளார், கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல உதவி பங்குத்தந்தை அந்தோணி ராஜ் அடிகளார் மற்றும் இறைமக்கள் ஆகியோர் இணைந்து பங்கு தந்தையர் பங்களாவில் இருந்து பவனியாக எடுத்து  வந்தனர்.  உலகின் சமாதானத்திற்காக வெள்ளை நிற புறா […]

கோவில்பட்டி

பிரதமர் மோடி மீது கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார்

கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைவர் க.தமிழரசன் தலைமையில் பலர் இன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பிரதமர் நரேந்திரமோடி மீது புகார் மனு அளித்தனர். அந்த புகாரில், “தேச ஒருமைப்பாட்டிற்கு பாதகமாகவும் மதவெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசியும் தேர்தல், விதிமுறைகளையும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிராகவும் நடந்து கொண்டதாக பிரதமர்  நரேந்திர மோடி  மீது குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. புகாரை சப் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பஸ் நிலையம் அருகே பொது கழிப்பிட முன் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து

சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் அறிவித்த போராட்டம் தொடர்பாக கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகள் மே  9ந்தேதி அகற்றப்படும் என்று கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.  இந்த நிலையில் கோவில்பட்டி பஸ் நிலையம் அருகே மெயின் ரோட்டில் உள்ள நகராட்சி கழிப்பிடம் முன் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து, திடீரென கடை அமைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு புறம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோவில்பட்டி கோட்டாட்சியர் நடவடிக்கை […]

கோவில்பட்டி

வெயிலின் தாக்கத்தை குறைக்க தர்பூசணி, தண்ணீர் பழங்கள்; வட்டாட்சியர் வழங்கினார் 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி  உத்தரவின் பேரில் கோவில்பட்டி வருவாய்துறை மற்றும் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் இணைந்து இன்று கோவில் பட்டி செண்பகவள்ளி அம்மன் கோவில் அருகே சாலை ஓர வாசிகள், மற்றும் பொது மக்களுக்கு வட்டாட்சியர் சரவண பெருமாள் தலைமை தாங்கி தர்பூசணி, குடி தண்ணீர், பாட்டில் வழங்கினார் நிகழ்ச்சியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் தலைவர் தேன் ராஜா, வருவாய் ஆய்வாளர் ராம மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர், கிராம நிர்வாக அலுவலர் மந்திர […]

செய்திகள்

வேதியியல் விழா: பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, வேதியியல் துறை சார்பாக பேராசிரியர் அப்பாஸ் அலி வேதியியல் மன்ற நிறைவு விழா மற்றும் வேதியியல் விழா-2024 நடைபெற்றது. துறைத்தலைவர் சுல்த்தான் செய்யது இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர், சபினுல்லாகான், டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி, முதல்வர் முஹம்மது முஸ்தபா மற்றும் இயற்பியல்துறை தலைவர், முஸ்தாக் அஹமது கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக பெங்களூரு, ஐபிஎம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோட்டாட்சியர் தலைமையில் நடந்த  கூட்டத்தில் முடிவு 

கோவில்பட்டி நகரில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் 26ந்தேதி பட்டினி போராட்டம் நடத்த போவதாக கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து இருந்தனர். இதையடுத்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜோன் கிறிஸ்டி பாய் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மே.9ந்தேதி கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றுவது , இன்று முதல் தற்காலிக கடைகளுக்கு உரிமைக் கட்டணம் வசூலிப்பதை […]