சைக்கிள்,ஸ்கூட்டர் மீது மோதி மிட்டாய் கடைக்குள் புகுந்த கார்; கோவில்பட்டியில் பரபரப்பு
![சைக்கிள்,ஸ்கூட்டர் மீது மோதி மிட்டாய் கடைக்குள் புகுந்த கார்; கோவில்பட்டியில் பரபரப்பு](https://tn96news.com/wp-content/uploads/2024/04/FB_IMG_1714190445048-1-850x560.jpg)
கோவில்பட்டி மாதாங்கோவில் சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். இன்று காலை பஸ் நிலைய பகுதியிலிருந்து மெயின் ரோட்டில் வந்த ஒரு கார், மாதாங்கோவில் தெரு சந்திப்பில் சில வினாடிகள் நின்றது.
பின்னர் அந்த கார், சாலையில் திரும்பியது.அப்போது மெயின் ரோட்டில் இருந்து பஸ் நிலையம் நோக்கி சென்ற ஒரு சைக்கிள் மீது லேசாக இடித்து விட்டு, மாதாங் கோவில் சாலையில் திருப்பத்தில் நின்ற ஒரு ஸ்கூட்டரை இடித்து தள்ளி விட்டு டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தெரு முனையில் இருக்கும் மிட்டாய் கடைக்குள் புகுந்து நின்றது.
ஒருசில வினாடிகளில்நடந்த இந்த விபத்தை ஏற்படுத்தியது ஒரு சிறுவன் என்றதும் அந்த பகுதியில் பரப்பரப்பு நிலவியது.
விபத்தில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.தகவல் அறிந்து வந்த போலீசார் இது பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கு இடையே இந்த விபத்து பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)