சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக – தேமுதிக இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெற்றது. தேமுதிக சார்பில் அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ்,துணைச் செயலாளர் பா.பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையின் போது நாலு தொகுதியிலும் ஒதுக்க அதிமுக முன் வந்ததாக தெரிகிறது. பேச்சுவார்த்தை முடிவில் செய்தியாளர்களை […]
ஆதித்தமிழர் கட்சி சார்பாக நடத்தப்பட்ட சமூகநீதி காப்போம் மாநாடு இன்று (6/3/2024) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு உரையாற்றினார். மாநாட்டில் அண்ணல் அம்பேத்கர் விருது அருட்சகோ.முனைவர் மரிய பிலோமி (சபைத்தலைமை அன்னை புனித அடைக்கல அன்னை சபை தலைவர் தமிழ்நாடு துறவியர் பேரவை), வீரத்தாய் குயிலி விருது மருத்துவர் கிளாரா (பான் செக்கர்ஸ் செவிலியர் கல்லூரி), தந்தை பெரியார் […]
பாராளுமன்ற தேர்தலில் ஒட்டிய பாஜக கட்சி தலைமையில் தனி கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் ஏசி சண்முகம், பாரிவேந்தர், தேவநாதன், ஜி கே வாசன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட சிலரின் கட்சிகள் இணைந்துள்ளன. இந்த நிலையில் பாஜக கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி இணைந்துள்ளது. கட்சியின் தலைவர் சரத்குமார், பாஜக தலைவர்களை நேற்று சந்தித்து அக்கட்சியின் கூட்டணியில் இணைந்து கொண்டார். அவருடன் மனைவி ராதிகா சென்றிருந்தார். இதைத்தொடர்ந்து சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பாரதிய ஜனதா […]
கோவில்பட்டியில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் வேலை நாட்களில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் முதல் அரசின் கடைநிலை ஊழியர்கள் வரையிலும், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், டி.எஸ்.பி., காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் என தினமும் சுமார் 5 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். ஆனால், இங்குள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த ஓராண்டுக்கு மேலாக தமாகா சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்கு மட்டும் பேவர் […]
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விச்வனாதசுவாமி திருக்கோவில். மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும். மற்ற யார் நினைத்தாலும் இந்த சிவாலயத்துக்குள் செல்ல முடியாது..செல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு தடைகள் வரும். வருடத்தின் 365நாட்களும் சூரிய ஒளி சிவன் மீது விழும் ஒரு அதிசய கோவில் இது. மகாசித்தர் அகத்திய முனிவரே இந்த கோவிலுக்கு வர பலமுறை முயற்சித்தும் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வருடத்திற்கு ஒருமுறை நாகர் (நல்லபாம்பு) இங்கு உள்ள […]
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. மதிமுக வை பொருத்தவரை 3 தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது. மேலும் தங்கள் கட்சியின் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவதில் அக்கட்சி உறுதியாக இருக்கிறது. ஆனால் திமுக சார்பில் 2 தொகுதிகள் ஒதுக்குதற்கு தயாராக இருக்கிறார்கள். மேலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தான் மதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவேண்டும் என்று நிர்பந்தம் வைக்கப்படுகிறது. இதற்கு மதிமுக சம்மதிக்கவில்லை. தொடர்ந்து […]
சென்னை பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை சார்பில் காலநிலை மாற்றத்தின் சமூக விளைவுகள் குறித்த சர்வதேச மாநாடு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கலந்து கொண்டு காலநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, “காலநிலை மாற்றம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது” என்று குறிப்பிட்டார். சமூகவியல் துறையின் தலைமை பேராசிரியர் தமிழரசன் , திட்டமிடல் மற்றும் சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் லாரா வெர்டிலி , சமூகவியல் […]
தூத்துக்குடி யில் இருந்து தருவைக்குளம், வேப்பலோடை,ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம், இனாம்கல்லூரணி, கீழவைப்பார் செல்லும் பஸ் வழித்தடத்தை இன்றைய தினம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்.மார்கண்டேயன் இனாம்கல்லூரணி கிராமத்தில் கொடியசைத்து தொடக்கி வைத்தார். நிகழ்வில்போக்குவரத்துகழக தூத்துக்குடி பொது மேலாளர், கோட்ட மேலாளர், விளாத்திகுளம் கிளை மேலாளர் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் வைப்பார் ஊராட்சி மன்ற தலைவர் சக்கம்மாள்ராமர் கிளைச் செயலாளர்கள் பேச்சிமுத்து,ராஜா,முருகேசன் ஒன்றிய வர்த்தக அணி […]
நடைபெற இருக்கும் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அந்த அணியில் இருந்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இன்று விலகியது. இதை தொடர்ந்து அக்கட்சியின் பொதுசெயலாளர் கதிரவன் , அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து அதிமுக கூட்டணியின் இணைந்தார். இதை தொடர்ந்து தேனி அல்லது ராமநாதபுரம் தொகுதி அக்கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே இனாம் கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனை அடுத்து சிவகிரி காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி மற்றும் போலீசார் இனாம் கோயில்பட்டியில் குறிப்பிட்ட இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது அங்கு மூட்டை மூட்டையாக புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 11 மூட்டைகள் மற்றும் 50 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இவற்றை பதுக்கி வைத்திருந்ததாக கோவில்பட்டி இனாம் மணியாச்சி கிழக்குத் […]