தொகுதி பங்கீடு: அதிமுக – தேமுதிக மீண்டும் பேச்சுவார்த்தை
![தொகுதி பங்கீடு: அதிமுக – தேமுதிக மீண்டும் பேச்சுவார்த்தை](https://tn96news.com/wp-content/uploads/2024/03/IMG_20240306_185442_234-850x560.jpg)
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக – தேமுதிக இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெற்றது.
தேமுதிக சார்பில் அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ்,துணைச் செயலாளர் பா.பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையின் போது நாலு தொகுதியிலும் ஒதுக்க அதிமுக முன் வந்ததாக தெரிகிறது.
பேச்சுவார்த்தை முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக குழுவினர், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது என்று தெரிவித்தனர்.
தேமுதிக இன்னும் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற விரும்புவதால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும் என்று தெரிகிறது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)