ஆதித் தமிழர் கட்சி மாநாட்டில் கனிமொழி எம்.பி.பங்கேற்பு
ஆதித்தமிழர் கட்சி சார்பாக நடத்தப்பட்ட சமூகநீதி காப்போம் மாநாடு இன்று (6/3/2024) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு உரையாற்றினார்.
மாநாட்டில் அண்ணல் அம்பேத்கர் விருது அருட்சகோ.முனைவர் மரிய பிலோமி (சபைத்தலைமை அன்னை புனித அடைக்கல அன்னை சபை தலைவர் தமிழ்நாடு துறவியர் பேரவை), வீரத்தாய் குயிலி விருது மருத்துவர் கிளாரா (பான் செக்கர்ஸ் செவிலியர் கல்லூரி), தந்தை பெரியார் விருது இல.ரவி (தலைவர் தமிழ்நாடு பெஸ்ட் ஆசிரியர் அரசு ஊழியர் பேராசிரியர் கூட்டமைப்பு), ஒண்டி வீரனார் விருது விஜயகுமார் (தலைவர், TAAMS சென்னை) ஆகியோருக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி., வழங்கி பாராட்டினார்.
மாநாட்டில், அதித்தமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக்கையன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.