• May 9, 2024

Month: September 2023

கோவில்பட்டி

கோவில்பட்டி பூவனநாத சுவாமி கோவிலில் பிரதோஷம் வழிபாடு

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் இன்று மாலை  வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனையும், நந்தியம் பெருமானையும் தரிசனம் செய்தனர்

கோவில்பட்டி

வந்தே பாரத் விரைவு ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்லவேண்டும்; நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்

திருநெல்வேலி-சென்னை இடையே சமீபத்தில் தொடங்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரெயில் கோவில்பட்டியில் நிற்பது கிடையாது. விருதுநகர் நிறுத்தம் இருக்கிறது, கோவில்பட்டி நிறுத்தம் கிடையாது. எனவே  பெரு நகரமாக விளங்கும் கோவில்பட்டியில் வந்தே பாரத் விரைவு ரெயில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி மனு அளித்து வருகிறார்கள். அந்த அடிப்படையில் கோவில்பட்டி நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர்  இன்று ரெயில் நிலைய அதிகாரி ரவிக்குமாரை  சந்தித்தனர். சங்க தலைவர் […]

சினிமா

விஜய்யின் லியோ இசை வெளியீட்டு விழா ரத்து ஏன் ? பரபரப்பு தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் […]

கோவில்பட்டி

உலக சுற்றுலா தினம்: கோவில்பட்டி கி.ரா.நினைவரங்கத்தை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்

இன்று செப்டம்பர்  – 27ம் தேதி உலக சுற்றுலா தினமாகும். இதையொட்டி கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோவில்பட்டியில் உள்ள கரிசல் இலக்கியத்தின் தந்தை  கி. ராஜநாராயணன் நினைவரங்கத்தை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.. நினைவரங்கத்தில் உள்ள டிஜிட்டல் நூலகம், கி.ராஜநாராயணன் பயன்படுத்திய பொருள்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். சுற்றுலா தலங்களை தூய்மையாக வைத்திருக்கவும்,பாதுகாத்திடவும், அரிய தகவல்களை எளிய முறையில் தெரியப்படுத்தவும்,காலாண்டு விடுமுறையில் பாடப் புத்தகத்தோடு நூலக புத்தகங்களையும் […]

தூத்துக்குடி

50 கிராம குளங்கள் பயன்பெறும் திட்டப்பணிகள் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மலைப்பட்டி- ஒட்டப்பிடாரம்- புதியம்புத்தூர் மலர்க்குளம், பெரியகுளம் மற்றும் ஒட்டப்பிடாரம் சுற்றியுள்ள 50 கிராம குளங்கள் பயன்பெறும் வகையில் வரத்து கால்வாய் நீரோடையில் 6 பாலங்கள் அமைத்தல்,15 கிலோமீட்டர் தூரம்வரை தூர்வாரும் பணி மேலும் புதிதாக 2.67 கிலோமீட்டர் தூரம் புதிய வழித்தட கால்வாய் அமைத்தல் போன்ற கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா வலியுறுத்தி இருந்தார். இதை ஏற்று […]

கோவில்பட்டி

கடைக்குள் புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவர் கைது

கோவில்பட்டியை அடுத்த பாண்டவர் மங்கலம் சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த செந்தில்ராஜ் மனைவி சண்முகத்தாய் (வயது 56). இவர் இதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பகலில் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் பிஸ்கட் கேட்டார். அப்போது கடையிலிருந்த பிஸ்கட் பாக்கெட்டை சண்முகத்தாய் எடுத்து கொண்டிருந்த போது, திடீரென்று கடைக்குள் அத்துமீறி நுழைந்த அந்த நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 3½ […]

தூத்துக்குடி

அமைச்சர் மா.சுப்பிரமணியன், 29ம் தேதி தூத்துக்குடி வருகை

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை மறுநாள்  29ம் தேதி வெள்ளிக்கிழமை தூத்துக்குடியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அன்றைய தினம் காலை 5.30 மணி அளவில் தூத்துக்குடி பெல் ஹோட்டல் முன்பிருந்து எஸ்.இ.பி.சி. நிறுவனம் வரை ‘நடப்போம் நலம்பெறுவோம்” என்னும் நோக்கில் 8 கி.மீ தூரம் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடத்தை ஆய்வு செய்து […]

கோவில்பட்டி

வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்லக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி-சென்னை இடையேயான வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.’ இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர், சரோஜா, தாலுகா செயலாளர்  ஜி.பாபு ஆகியோர் தலைமை தாங்கினார்கள். நிர்வாகிகள் பரமராஜ், சேதுராமலிங்கம், டி.முனியசாமி, ரஞ்சனி கண்ணம், விஜயலட்சுமி, எம்,ராஜூ. சண்முகவேல், அலாவுதீன், சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிவில் கட்சி பிரதிநிதிகள், ரெயில்நிலைய அதிகாரியை சந்தித்து கோரிக்கை […]

கோவில்பட்டி

அக்டோபர் 1-ந்தேதி முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரெயிலாக மாற்றம்

அக்டோபர் 1-ந்தேதி முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரெயிலாக மாற்றப்படுகிறது. சென்னை, சென்னை எழும்பூரிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு இரவு 8.10 மணிக்கும், கொல்லத்திலிருந்து தினமும் மாலை 3.40 மணிக்கு சென்னை எழும்பூருக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரும் அக்டோபர் 1-ந்தேதி முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவிரைவு ரெயிலாக மாற்றி இயக்கப்பட உள்ளது. இதேபோல, இந்த அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு பதிலாக […]

கோவில்பட்டி

கோவில்பட்டி யூனியனில் ரூ2.12 கோடி வளர்ச்சிப் பணிகள்

கோவில்பட்டி. யூனியன் சிறப்பு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பழனிச்சாமி, யூனியன் ஆணையர் ராஜேஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், யூனியனுக்கு உட்பட்ட 19 வார்டுகளிலும் யூனியன் பொது நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் மதிப்பில் சாலை வசதி, வாறுகால் வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது என்று முடிவு செய்யபப்ட்டது. யூனியனிலுள்ள தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை […]