• May 17, 2024

பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி முறிவு பற்றி அமைச்சர் துரைமுருகன் கருத்து

 பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி முறிவு பற்றி அமைச்சர் துரைமுருகன் கருத்து

சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

காவிரி நீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கடைசி தீர்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். கூட்டாட்சி தத்துவம் என்ன சொல்கிறதோ அதை பின்பற்ற வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம், பேரணிகள் நடத்தப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டின் தனித்தன்மை என்னவாகும்? என்பதை அரசியல் தெளிவு தெரிந்தவர்கள் உணர வேண்டும்.

தங்கள் கருத்துக்கு எதிர்ப்பு வருகிறது, அதனை எப்படி கட்டுப்படுத்த வேண்டும்? என்பதை சுப்ரீம் கோர்ட்டு தீர்மானிக்க வேண்டும்.

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டிற்குத் தேவையான 12,500 கன அடி தண்ணீர் வேண்டுமென்று வற்புறுத்துவோம்.

பா.ஜ.க. கூட்டணியில் இருக்க கூடாது என்பதை உணர்ந்து தான் அ.தி.மு.க. முடிவு எடுத்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணி முறிவு, அவர்கள் வீட்டில் நடப்பது, அதைப் பற்றி நாம் கருத்து கூற முடியாது.

அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இருக்க வேண்டுமா? இருக்கக்கூடாதா என்பதை அந்த கட்சி தலைவர்கள் உணர வேண்டும். அதிமுகவினர் உணர்ந்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

——

#புதிய தலைமுறை #புதிய தலைமுறை நியூஸ்#மாலைமுரசு#பாலிமர் நியூஸ்#பாலிமர் செய்திகள்#மாலைமுரசு செய்திகள்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *