• May 20, 2024

Month: August 2023

கோவில்பட்டி

நிலவில் இறங்கியது சந்திரயான்: கோவில்பட்டியில் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்

சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நேற்று நிலவில் இறங்கியது. இது தொடர்ந்து 14 நாட்கள் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதுடன் அங்குள்ள மண்ணையும் ஆய்வு செய்யும். சந்திரயான் 3 வெற்றியின் மூலம் நிலவின் தென் துருவத்தை தொட்ட முதலாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இது நாடு முழுவதும் மகிழ்ச்சியை கொண்டாட வைத்துள்ளது. கோவில்பட்டி பஸ் நிலையம் எதிரே  தேவர் சிலை அருகில் தேசியக் கொடியுடன் பாரத பிரதமர் மோடி புகைப்படத்துடன் பா.ஜனதா கட்சியினர் கூடினார்கள். பொதுமக்களுக்கு  இனிப்பு […]

தூத்துக்குடி

இரண்டாம் நிலை காவலர் தேர்வு: இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அதிகாரி சையது முகமது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 3359 இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு 18.8.2023 முதல் 17.9.2023 வரை இணைய வழியில் விண்ணப்பம் செய்யலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.  இத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு […]

தூத்துக்குடி

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு அடுத்த மாதத்துக்கு ஒத்திவைப்பு

தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாக தி.மு.க. அரசு 2006-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அனிதா ராதாகிருஷ்ணன் 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2020-ம் ஆண்டு அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. ஏற்கெனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கிய நிலையில், அமைச்சரின் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் […]

தூத்துக்குடி

3345 பேருக்கு தொழிற்கடன்; கனிமொழி எம்.பி.வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் ஒருங்கிணைப்பில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் கடன் ஆணைகள் வழங்கும் விழா காமராஜ் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில்  கனிமொழி எம்.பி.,  சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு, 3345 பேருக்கு ரூ.342 கோடி மதிப்பிலான தொழிற் கடனுதவிக்கான ஆணைகளை வழங்கினர்.  விழாவில், மாவட்ட ஆட்சியர்  செந்தில்ராஜ், சார் ஆட்சியர்  கவுரவ்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்  சுவர்ணலதா […]

ஆன்மிகம்

வரலட்சுமி விரதம் வழிபாடு நடத்துவது எப்படி?

ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தை கூறியதும் மகாலட்சுமி தங்க நெல்லிக்கனியைப் பொன் மழையாய் பொழிந்தாள் என்று கூறப்படுகிறது. ஸ்வேதாந்த தேசிகரின் வேண்டுகோளுக்கு இணங்கிய மகாலட்சுமி அப்பொழுதும் பொன்மழை பொழிந்ததாக ஐதீகம். அஷ்டலட்சுமிகள் அளிக்கும் அனைத்தையும் தான் ஒருத்தியாக மட்டுமே அளிக்கக்கூடியவள் வரலட்சுமி. இவளே வித்யா லட்சுமி, வீர லட்சுமி,  அன்ன லட்சுமி, திருமடப்பள்ளி நாச்சியார், மோட்ச லட்சுமி,  கோலபுர நாயகி, மகுட லட்சுமி,  குபேர லட்சுமி,  தீப லட்சுமி,  எனப் பல திருநாமங்கள் கொண்டவள். வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் […]

ஆன்மிகம்

லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு

லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு செய்யுங்கள். கல்வியில் சிறக்க ஹயக்ரீவர் வழிபாட்டை தொடருங்கள் ஹயக்ரீவர் சுவாமியை எப்படி வழிபட வேண்டும் என்ற வழிபாட்டு முறைகளை இங்கு பார்க்கலாம். ஹயக்ரீவர் சிறப்புகள்: நாம் நினைத்ததை நினைத்த வண்ணம் நிறைவேற்ற உதவும் தெய்வம் ஹயக்ரீவர். மாணவர்களின் கல்வியில் சிறக்க ஹயக்ரீவர் தெய்வத்தை வழிபடுவது நல்லது. நம் ஞானத்தை அதிகரிக்க உதவுபவர் ஹயக்ரீவர். முடிவெடுப்பதில் குழப்பமான சூழல் இருந்தால் தெளிந்த முடிவை எடுக்க அருள் தருபவர் ஹயக்ரீவர். நாராயணின் ஒரு ரூபமாக ஹயக்ரீவர் […]

செய்திகள்

ஏ.சி.இயங்காததால் வாந்தி, மயக்கம்: அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்திய பயணிகள்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து தாம்பரத்துக்கு வாரத்திற்கு 3 முறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து இந்த ரெயில் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு வந்தது. குளிர்சாதன வசதி கொண்ட பி.5 பெட்டியில் ஏ.சி. இயங்கவில்லை. இதனால் பயணிகள் சிரமம் அடைந்தனர். அந்த பெட்டியில் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த நிலையில் ஏ.சி. இயங்காதது குறித்து ரெயில்வே நிா்வாகத்திற்கு ஆன்லைனில் புகார் தெரிவித்தனர். ஆனால் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளது. […]

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா; பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அக்டோபர் 15-ந் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 25-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது. இந்த திருவிழாவில் பக்தர்கள் காளி, அம்மன், சிவன், கிருஷ்ணா், முருகன், விநாயகர் போன்ற சாமி வேடங்கள் மற்றும் குறவன், குறத்தி, போலீஸ், குரங்கு, கரடி, சிங்கம், புலி போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.  இதில் காளி வேடம் அணியும் பக்தர்கள் […]

கோவில்பட்டி

தகுதி சான்று பெறாத 2 ஆட்டோ, லாரி உரிமையாளர்களுக்கு அபராதம்

கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் வட்டார போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் நேற்று  வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது தகுதிசான்று, காப்பு சான்று இல்லாமல், அனுமதிக்க பட்ட அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்ற 2 ஆட்டோக்களை அவர் பறிமுதல் செய்தார். இந்த ஆட்டோ உரிமையாளர்களுக்கு தலா ரூ.29 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல தண்ணீர் டேங்கருடன் கூடிய லாரி ஒன்று தகுதி சான்று, காப்புச் சான்று இல்லாமல் இயக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த வாகனமும் பறிமுதல் […]

கோவில்பட்டி

கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்திய 3 பேர் சிக்கினர்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு சுங்கச்சாவடி அருகே தனிப்படை உதவி ஆய்வாளர்கள் ரவிக்குமார், ராஜ பிரபு, பிரடரிக் ராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.’ அப்போது லாரியின்  மேற்பகுதியில் ஒரு ரகசிய அறை இருந்தது தெரிய வந்தது. போலீசார் அந்த அறையை திறந்து சோதனையிட்ட போது 2 கிலோ வீதம் 300 பேக்குகளில் […]