• April 19, 2025

Month: July 2023

கோவில்பட்டி

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் 

கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. நிர்வாகி கருப்பசாமி தலைமை தாங்கினார். வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பின் தலைவர் க.தமிழரசன் கீழ்க்கண்ட தீர்மானங்களை முன்மொழிந்தார். *மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறலைக் கட்டுப்படுத்தாத மணிப்பூர் மாநில அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் * மணிப்பூர் மலைகளில் கிடைக்கும் கனிம வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நோக்கத்தோடு மணிப்பூர் கலவரத்தை கண்டும் காணாமல் இருக்கும் மத்திய  அரசுக்கு கண்டனம். *தமிழ்நாட்டில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ரோட்டரி சங்க புதிய உறுப்பினர்களுக்கு பயிற்சி

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் புதிய உறுப்பினர்களுக்கான  பயிற்சி முகாம் யூனியன் கிளப் வளாகத்தில்  நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார் ரோட்டரி மாவட்டதலைவர் விநாயகா ரமேஷ், மாவட்ட உதவி ஆளுநர் முத்துச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் சரவணன் அனைவரையும் வரவேற்றார். மாவட்டம முன்னாள் ஆளுநர் முனைவர் ஷேக் சலீம்,கிளப் சர்வீஸ் அவன்யூ சேர்மன் ஆறுமுகச்செல்வன், மாவட்ட உறுப்பினர் சேர்க்கை சேர்மன் ராமசுப்பிரமணிய ராஜா ஆகியோர் ரோட்டரி செயல்பாடுகள் குறித்து பயிற்சி […]

செய்திகள்

இரும்பு பெட்டியில் ரூ.5600 கோடி முறைகேடு ஆவணங்கள்: கவர்னருடன் அண்ணாமலை சந்திப்பு

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் , பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் இணைந்து இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்,எம்.பி.க்கள் மற்றும் குடும்பம் செய்த ரூ.5600 கோடி மதிப்பிலான 3 முறைகேடுகள் தொடர்பான பினாமி ஆவணங்கள் அடங்கிய ஆவணங்களுடன் தி.மு.க. பைல்ஸ் 2 குறித்து […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் நாளை ஓவிய போட்டி; மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தில் நாளை வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் ஓவியமணி சி.கொண்டையராஜூ 47-வது நினைவு தினத்தை முன்னிட்டு கொண்டையராஜூ ஆர்ட் பவுண்டேஷன் சார்பில் ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது. எல்.கே.ஜி., யு.கே.ஜி.மாணவர்களுக்கு உனக்கு பிடித்த பழம், 2-வது  வகுப்பு மாணவர்களுக்கு அழகிய பூ (இலையுடன்), 4,5ம் வகுப்பு மானவர்களுக்கு நமது தேசிய பறவை, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு காட்டு விலங்கு, 9,10 ம் வகுப்பு மாணவர்களுக்கு இளங்காலை […]

கோவில்பட்டி

ஆர்.சி மேல்நிலைப்பள்ளியில் 77 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

கோவில்பட்டி ஆர்.சி மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழச்சி  தாளாளர் அருட்தந்தை சார்லஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் ஏஞ்சலா சின்னத்துரை முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் அலெக்ஸ் ஜான் வரவேற்று பேசினார் .கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி பங்கேற்று 34 மாணவிகளுக்கும் , 44 மாணவர்களுக்கும் அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்  நகர்மன்ற உறுப்பினர் உமாமகேஸ்வரி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கார்கில் வெற்றி தினம்; இந்திய வரைபடத்தில் அகல்விளக்குகள் ஏற்றி மாணவிகள் மரியாதை  

1999ம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கார்கில் போரில் 527 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.1363 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். 1999ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி வரை நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றிபெற்றது. உயிர் தியாகம் செய்த 527 ராணுவ வீரர்களின் தியாகங்களை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை 26 கார்கில் வெற்றி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கார்கில் வெற்றி […]

தூத்துக்குடி

பனிமய மாதா பேராலய திருவிழா: தூத்துக்குடியில் 5-ந்தேதி வரை பஸ்கள் வழித்தடம் மாற்றம்;

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழா இன்று 26.7.2023 காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 5.8.2023 வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள்  இயக்கப்படுகிறது.. 25.7.2023 முதல் 2.8.2023 வரை பஸ்கள்  வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி  பழைய பேருந்து நிலையத்திலிருந்து திரேஸ்புரம் செல்லும் […]

கோவில்பட்டி

மகளிர் உரிமை தொகை: ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க அஞ்சல்

,கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கலைஞர் மகளிர்  உரிமை தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என்பதால் தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பெமேண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம். தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோ மெட்ரிக் சாதனத்தின் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி புனித பனிமய மாதா பேராலய திருவிழா; கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடியில் புகழ் பெற்ற புனித பனிமய மாதா பேராலயத்தின் 441 வது ஆண்டு திருவிழா இன்று புதன்கிழமை காலையில் தொடங்கியது. இதையடுத்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்குப் பின்னர், ஆலயத்தை சுற்றி கொடி பவனி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆலயத்தின் முன்புள்ள கொடிக்கம்பத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி, கொடியை ஆசீர்வதித்து புனிதப்படுத்தி ஏற்றினார். அப்போது, பனிமய அன்னையை வேண்டி பக்தர்கள் குரல் எழுப்பினர். தொடர்ந்து சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டன.  திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை […]

கோவில்பட்டி

டாக்டர் ராமதாஸ் 85-வது பிறந்தநாள்; கோவில்பட்டி கோவிலில் சிறப்பு பூஜை

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் டாக்டர்  ராமதாஸ்  இன்று தனது 85 வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாநாளை பசுமை தாயக நாளாக பாட்டாளி மக்கள் கட்சியினர் கொண்டாடினர்.. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து மரக்கன்றுகள் நட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பா.ம.க.வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், செண்பகவல்லி அம்மன்  உடனுறை பூவனநாதசாமி கோவிலில் டாக்டர் ராமதாஸ் பெயரில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் […]