தூத்துக்குடி புனித பனிமய மாதா பேராலய திருவிழா; கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடியில் புகழ் பெற்ற புனித பனிமய மாதா பேராலயத்தின் 441 வது ஆண்டு திருவிழா இன்று புதன்கிழமை காலையில் தொடங்கியது. இதையடுத்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்குப் பின்னர், ஆலயத்தை சுற்றி கொடி பவனி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆலயத்தின் முன்புள்ள கொடிக்கம்பத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி, கொடியை ஆசீர்வதித்து புனிதப்படுத்தி ஏற்றினார். அப்போது, பனிமய அன்னையை வேண்டி பக்தர்கள் குரல் எழுப்பினர். தொடர்ந்து சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டன.
திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 4.30 மணி, பகல் 12 மணி, மாலை 3 மணி, இரவு 7.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் விழாநாட்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் ஆயர்கள், பங்கு தந்தையர்கள் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக ஆயர்கள் ஸ்டீபன், இவோன்அம்புரோஸ், அந்தோணிசாமி, முதன்மை குரு பன்னீர் செல்வம் மற்றும் பங்கு தந்தையர்கள், உலகமெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், இறைமக்கள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். ஆகஸ்ட் 4ம்தேதியன்று இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்திற்குள் பனிமய அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. வருகிற .5ம் தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான அன்னையின் தங்கத்தேர் பவனி பெருவிழா நடைபெறுகிறது.
இன்று காலை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்குத்தந்தை குமார் ராஜா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், லட்சக்கணக்கான மக்கள் கொடியேற்ற நிகழ்ச்சியில் கூடி இருந்தனர்.
. ஆலய கொடியேற்றத்தை முன்னிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் நிறைகுடம் பால் மற்றும் வாழைப்பழம் தார், ஆகியவற்றை கொடிமரத்தின் முன் வைத்து வணங்கி கொடியேற்றம் முடிந்ததும் அனைவருக்கும் வழங்கினார்கள். சிறு குழந்தைகளை பெரியவர்கள் கையில் தூக்கி சென்று கொடிமரத்தின் முன்பு உட்காரவைத்து கொண்டு சென்றனர். கொடியேற்றத்தை முன்னிட்டு சமாதனத்தை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட புறாக்கள் பறக்கவிடப்பட்டன. மற்றும் துறைமுகத்திலிருந்து சைரன் ஒலிக்கப்பட்டது.
விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையில் 6 கூடுதல் சூப்பிரண்டுகள்,, 12 டி.எஸ்..பி.கள், மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். இதற்கான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலயவளாகம் அருகே தற்காலிகமாக இரண்டு கண்காணிப்பு கோபுரங்களை போலீசார் அமைத்துள்ளனர்.
