• April 19, 2025

மகளிர் உரிமை தொகை: ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க அஞ்சல் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு

 மகளிர் உரிமை தொகை: ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க அஞ்சல் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு

,கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கலைஞர் மகளிர்  உரிமை தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என்பதால் தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பெமேண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோ மெட்ரிக் சாதனத்தின் மூலம் பயனாளிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி e -kyc (விரல்ரேகை மூலம்)மூலம் ஒரு சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பெமேண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க முடியும். இந்த கணக்கிற்கு இருப்பு தொகை எதுவும் கிடையாது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமை தொகையை அருகில் உள்ள அஞ்சலகங்களிலும் DOOR STEP BANKING என்ற சிறப்பு சேவை மூலமும் தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தியா போஸ்ட் பெமேண்ட்ஸ் வங்கி, அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான வங்கியாகும். இந்தியா போஸ்ட் பெமேண்ட்ஸ் வங்கியை அணுகுவதற்கு எளிமையான, குறைந்த கட்டணங்களுடன், நகரங்களில் மற்றும் வங்கிகள் இல்லாத கிராமங்களில் உள்ள  பொதுமக்களுக்கு எளிய வங்கி சேவை அளிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் மட்டும் அல்லாமல் நூறு நாள் வேலைத்திட்ட பயனாளிகள் பிரதமர் கிசான் திட்ட பயனாளிகள்., முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தொழிலாளர் நலவாரிய உதவித்தொகை பெறும் பயனாளிகளும் இந்திய போஸ்ட் பெமேண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

எனவே கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் தென்காசி பகுதிகளில் உள்ள பயனாளிகள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பெமேண்ட்ஸ் வங்கி சேவையை பயன்படுத்தி தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடங்கி பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்,.

இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *