தூத்துக்குடி நேரு யுவ கேந்திரா, பாண்டவர்மங்கலம் கஸ்தூரிபாய் காந்திஜி மகளிர் நற்பணி மன்றம் இணைந்து மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் பொது அறிவு வினாடி வினா நிகழ்ச்சியை நடத்தின. இந்நிகழ்ச்சிக்கு நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் ஞானச்சந்திரன் தலைமை தாங்கினார். பாண்டவர்மங்கலம் கஸ்தூரிபாய் காந்திஜி மகளிர் மன்றத்தின் கவுரவ ஆலோசகர் விஜயன் அனைவரையும் வரவேற்றார். மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சிக்கு கருத்தாளர்களாக தூத்துக்குடி ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், […]
கோவில்பட்டி கம்மவார் டிரஸ்ட் கல்யாண மண்டபத்தில் ” மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச யோகா தினம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை ” என்ற தலைப்பில் 4 நாள் புகைப்படக் கண்காட்சி இன்று தொடங்கியது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் சார்பாக நடத்தப்படும் இந்த புகைப்பட கண்காட்சி 23-ந் தேதி நிறைவு பெறுகிறது. இக்கண்காட்சியை தினமும் காலை 10 மணி முதல் […]
சென்னையில் சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல் போக்குவரத்து போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. அதை உடனுக்குடன் சரி செய்வதில் பெரும் பிரச்சினை உள்ளது. உடனுக்குடன் போக்குவரத்து நெரிசலை சரிசெய்வதற்காக விஞ்ஞான ரீதியாக புதிய திட்டங்களை போக்குவரத்து போலீசார் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அதில் ஒன்றாக கூகுள் வரைபடம் மூலம் வாகன நெரிசலை சீர் செய்யும் திட்டம் ஒன்று சோதனை அடிப்படையில் சென்னையில் செயல்படுத்தி பார்க்கப்பட்டது. அதில் வெற்றி கிடைத்ததால் கூகுள் வரைபடம் மூலம் வாகன நெரிசலை சீர் […]
ஓம் ராவத் இயக்கத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள “ஆதிபுருஷ்” என்ற திரைப்படம் பல மொழிகளில் உலகம் முழுவதும் கடந்த 16-ம் தேதி வெளியானது. இத்திரைப்படம் ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டிருப்பதாக பல மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியானதால், இந்தியா முழுவதும் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு மிகவும் கூடியிருந்தது. ஆனால், இத்திரைப்படம் வெளியான இரு நாட்களிலேயே இப்படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து பல சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. பல இடங்களில் திரையரங்க வாசல்களில் போராட்டங்களும் […]
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 31 வது வார்டு ஸ்ரீராம் நகர் 2வது தெருபகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டப்படுகிறது. இந்த பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு புதிய நியாய விலை கடை கட்டும் பணியை தொடங்கி வைத்தார். நகராட்சி செயற்பொறியாளர் சணல்குமார், 31வது நகர்மன்ற உறுப்பினர் சீனிவாசன், […]
தமிழில் ‘கரகாட்டக்காரன்’, ‘அதிசய பிறவி’, ‘விரலுக்கேத்த வீக்கம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை கனகா. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகிலிருந்து விலகியிருக்கும் கனகா, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார். திரைப்படத்தில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் அப்பாவுடன் சொத்து தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை, கை கூடாத காதல் எனப் பல பிரச்சினைகளால் வீட்டில் முடங்கிய நிலையிலேயே இருந்துள்ளார் கனகா. இதனால் பல வருடங்களாக அவர் தனிமை வாழ்க்கையே வாழ்ந்து வந்துள்ளார். ஒரு […]
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் லேசான தூறல் விழுந்த படி அதிகாலை முதல் கால நிலை காணப்படுகிறது. கனமழை காரணமாக நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய பல விமானங்கள் பெங்களூர் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து கிளம்பும்போது விமானங்கள் தாமதமாக கிளம்பியது, ஒரு சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. […]
தூத்துக்குடி அண்ணாநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற வன்னியராஜ். இவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 39). இவர்களது மகள் சத்யா (20), மகன் கணேசன் (18). சில ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுப்புலட்சுமி, அவரை பிரிந்து மகளுடன் கே.டி.சி நகரில் உள்ள உறவினர் சுடலைமணி என்பவருடன் வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சத்யாவுக்கு, சுப்புலட்சுமி திருமணம் செய்து வைத்தார். இதுகுறித்து […]
கோவில்பட்டி இலுப்பையூரணி ஆக்கி கிளப் சார்பில் கோடைகால ஆக்கி பயிற்சி முகாமில் கலந்து கொண்ட வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது இலுப்பையூரணி பஞ்சாயத்து தலைவர் செல்வி சந்தானம். ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முனைவர் குருசித்திர சண்முக பாரதி தலைமையில் அரசு அக்குபஞ்சர் மருத்துவர் திருமுருகன் மற்றும் தொழிலதிபர் பாண்டி முன்னிலையில் வேல்ஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் நாகமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் 25 நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து […]
தூத்துக்குடி மாவட்ட ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் நம்பிராஜ் பாண்டியன் தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துணை செயலாளர்கள் முத்துசாமி, பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அருந்ததி சந்திரன், தலைவர் காளிமுத்து, ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் கோட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக ஆதி […]