பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்தை தடை செய்யகோரி மோடிக்கு கடிதம்  

 பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்தை தடை செய்யகோரி மோடிக்கு கடிதம்  

ஓம் ராவத் இயக்கத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள  “ஆதிபுருஷ்” என்ற  திரைப்படம் பல மொழிகளில் உலகம் முழுவதும் கடந்த 16-ம் தேதி வெளியானது.

இத்திரைப்படம் ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டிருப்பதாக பல மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியானதால், இந்தியா முழுவதும் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு மிகவும் கூடியிருந்தது. ஆனால், இத்திரைப்படம் வெளியான இரு நாட்களிலேயே  இப்படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து பல சர்ச்சைகள் உருவாகி வருகின்றன.

பல இடங்களில் திரையரங்க வாசல்களில் போராட்டங்களும் நடைபெறுகின்றன. சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கக்கோரி இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலும் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் “ஆதிபுருஷ் படத்தில் ராமர், அனுமனை விடியோ கேம் கதாபாத்திரம் போல சித்தரித்தும் அவதூறு செய்யும் வகையில் படத்தில் வசனம் இடம்பெற்றிருப்பது உலகத்தில் உள்ள இந்தியர்கள் மனதை புண்படுத்துகிறது. சனாதன தர்மத்தை அவமதிக்கு இந்த படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்றும் ஓடிடி தளங்களில் ஆதிபுருஷ் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *