தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் தேவக்கோட்டையை சேர்ந்த கரிகாலன் முடியரசன், கமுதியை சேர்ந்த செல்வம் வழிவிட்டான், நாகர்கோவிலை சேர்ந்த அனிஷ் பீட்டர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த முத்துகருப்பன் உலகன், சுந்தரேசன் அம்மாசி, ராஜ்குமார் கணேசன், கருப்பையா மாயாண்டி, மதுரை மேலூரை சேர்ந்த கருப்பையா முனியாண்டி, கருப்பையா பிச்சன், பாண்டி அழகன், சேகர் சேவகமூர்த்தி, நடராஜன் அழகப்பன், தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த துரைக்கண்ணு சின்னையன் ஆகியோர் தனியார் முகவர்கள் மூலமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்ராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும். மழைக்காலம் என்றால் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு அனுமதி வழங்காது. ஏனென்றால் காட்டாறு வெள்ளம் மலையில் கரைபுரண்டு ஓடும். இதில் பக்தர்கள் சிக்கிகொள்வார்கள் என்பதால் அனுமதி வழங்குவதில்லை/ இந்த நிலையில் தற்போது பிரதோஷம், மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல […]
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 15 பேர் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதாக இன்று உடற்கல்வி ஆசிரியருடன் சென்றனர், போட்டியில் பங்கேற்றுவிட்டு அவர்கள் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியை சுற்றி பார்த்துவிட்டு செல்லாண்டியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கினர். அப்போது தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா […]
தூத்துக்குடி ஜி.ஆர்.டி ஓட்டல் கூட்டரங்கில் இன்று விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் விமான நிலைய ஆலோசனைக் குழுத் தலைவர்/ தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கனிமொழி எம்.பி.பேசுகையில் கூறியதாவது:- தூத்துக்குடி விமான நிலையத்தில் ஓடுதளம் விரிவாக்கம் செய்யும் பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிந்துவிடும். பணிகள் முடிந்தவுடன் இரவு நேர விமானங்கள் இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் விமான நிலைய அலுவலகத்திற்கான புதிய கட்டடமும் வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் […]
தூத்துக்குடி, தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூபாண்டியபுரம் பகுதியில் தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரத்தினம் (வயது 65) என்பவர் கடந்த 19.1.2023 அன்று ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்து ரத்தினத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்ற வழக்கில் தூத்துக்குடி புதிய முனியசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் மகன் அந்தோணி சூர்யா (22) மற்றும் மாரிமுத்து மகன் சக்திகுமார் (19) ஆகிய இருவரை தாளமுத்துநகர் காவல் நிலைய […]
கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் பாலகணேஷ் (வயது 18). இவரது தந்தை ஆனந்தராஜ்,. கழுகுமலை தெற்கு ரதவீதியை சேர்ந்தவர். மாணவர் பாலகணேஷ் தினமும் தனது ஊரிலிருந்து பேருந்தில் புறப்பட்டு கோவில்பட்டி இனாம் மணியாச்சி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து கல்லூரிக்கு செல்வார். கிருஷ்ணாநகர் அருகே ரெயில்வே தண்டவாளத்தை கடந்து கல்லூரிக்கு செல்வது வழக்கம். அதே போல் இன்று காலை மாணவர் பாலகணேஷ் கல்லூரிக்கு செல்லும்போது கிருஷ்ணா […]
கோவில்பட்டியில் பழைய இருசக்கர வாகன விற்பனை மற்றும் கடன் மேளா நடத்தப்படுகிறது. எட்டயபுரம் சாலையில் உள்ள சி. சிதம்பரநாடார் திருமண மண்டபத்தில் வருகிற 15,16-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது.’ ஸ்ரீராம் பைனான்ஸ் மற்றும் அரவிந்த் ஹீரோ, வெங்கடாசலம் டி.வி.எஸ்.,சஹானா மோட்டார்ஸ், வி.எஸ்.எம்.எஸ்.சுசுகி, பஜாஜ் ஆட்டோ டீலர் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த மேளா நடத்தப்படுகிறது. பழைய இரு சக்கர வாகன கடன் மேளாவுடன் எக்சேஞ்ச் மேளாவும் நடக்கிறது. ஸ்ரீராம் பைனான்ஸ் பழைய இரு சக்கர வாகனங்களுக்கு […]
கோவில்பட்டியில் தற்போது இயங்கும் இடத்திலேயே நகராட்சி தினசரி சந்தை இயங்க வேண்டும். இதை இடித்து விட்டு புதிய சந்தை அமைக்கக்கூடாது. அதற்கு பதிலாக ஒதுக்கப்பட்ட நிதியில் நகர்பகுதியில் வேறு இடத்தில கூடுதல் மொத்த தினசரி சந்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவில்பட்டி பஸ் நிலையம் அருகே இன்று மாலை பா.ஜனதா சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. பாரதீயஜனதா கட்சி சார்பாக கோவில்பட்டி நகர தலைவர் சீனிவாசன் தலைமையில் பொதுச் செயலாளர் விஜயகுமார் முன்னிலையில் […]
பாக்கியராஜின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான பயில்வான் ரங்கநாதன், வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், தற்போது பல நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை யூடியூப் மூலம் விமர்சனம் செய்து வருகிறார். இணையதளம் ஒன்றில், நடிகை ஷகிலா பயில்வான் ரங்கநாதனை பேட்டி எடுத்தார். இதில்,ஷகிலா கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் பயில்வான் ரங்கநாதன் திக்குமுக்காடி போனார். இதில், அனைத்து நடிகைகள் பற்றி காசிப் பேசுகிறீர்கள், […]
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா படப்பிடிப்புகளில் பிசியாக பங்கேற்று நடித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்த நோய் குணமாக சிறிது காலம் ஆகும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமந்தா விரைவில் குணமடைய வாழ்த்தினர். சிகிச்சை பெற்று வந்ததால் சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி […]