ஆற்றில் மூழ்கி 4,மாணவிகள் பலி; தலைமை ஆசிரியர், 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

 ஆற்றில் மூழ்கி 4,மாணவிகள் பலி; தலைமை ஆசிரியர், 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 15 பேர் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதாக இன்று உடற்கல்வி ஆசிரியருடன் சென்றனர்,

போட்டியில் பங்கேற்றுவிட்டு அவர்கள் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியை சுற்றி பார்த்துவிட்டு செல்லாண்டியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கினர்.

அப்போது தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா ஆகிய 4 மாணவிகள் நீரில் மூழ்கினர். உடனடியாக அங்கிருந்தவர்கள் மாணவிகளை மீட்பதற்காக தேடினர். இதுகுறித்து தகவலறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை நிலையங்களுக்கு தகவல் அளித்தனர். இரு நிலைய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை வீரர்கள் மாயனூர் காவிரி ஆற்றில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மாணவிகளை தேடிய நிலையில் தமிழரசி, இனியா, லாவண்யாவின் உடல்கள் அடுத்தடுத்து சடலமாக மீட்கப்பட்டனர்.

தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் சோபிகாவின் உடலும் மீட்கப்பட்டது. இதில் உயிரிழந்த மாணவிகள் அல்லாத நீரில் மூழ்கிய 3 மாணவிகளை கீர்த்தனா என்ற மாணவி மீட்டுள்ளார். இதுகுறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தநிலையில், குளித்தலை அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல தவறியதால் புதுக்கோட்டை பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பொட்டுமணி, ஜெபசாய இப்ராஹிம், திலகவதி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

கரூர் மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பள்ளி மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *