சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி;சிவராத்திரி அன்று இரவில் தங்கலாம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்ராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும்.
மழைக்காலம் என்றால் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு அனுமதி வழங்காது. ஏனென்றால் காட்டாறு வெள்ளம் மலையில் கரைபுரண்டு ஓடும். இதில் பக்தர்கள் சிக்கிகொள்வார்கள் என்பதால் அனுமதி வழங்குவதில்லை/
இந்த நிலையில் தற்போது பிரதோஷம், மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள்அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற .18-ந்தேதி முதல் .21-ந்தேதி வரை கோயிலுக்கு பக்தர்கள் சென்று வரலாம். மகா சிவராத்திரி அன்று மட்டும் சதுரகிரி மலையில் பக்தர்கள் இரவில் தங்கலாம். என்று அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.