கோவில்பட்டி மார்க்கெட் பிரச்சினை: சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்; வியாபாரிகள்
கோவில்பட்டியில் நகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை இயங்கி வருகிறது. இங்குள்ள 398 கடைகளை இடித்துவிட்டு, கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.84 கோடி மதிப்பில் புதியதாக 251 கடைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தினசரி சந்தையில் புதிய கடைகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்வரை தற்காலிக சந்தை ஜன.26-ம் தேதி முதல் புறவழிச்சாலையில் உள்ள புதிய கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]







