Month: December 2022

செய்திகள்

திருவண்ணாமலை அருகே வெட்டிக்கொலை: ஒரே குடும்பத்தில் 6 பேர் பலியான பரிதாபம்

திருவண்ணாமலை அருகே செங்கம் அடுத்த ஒரந்தவாடி கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். விவசாயம் செய்து வந்தார்,. இவரது மனைவி வள்ளி. இந்த தம்பதிக்கு திரிஷா (15), மோனிஷா (14), சிவசக்தி (6), பூமிகா (4)என்ற 4 மகள்களும், தனுஷ் என்ற 4 வயது மகனும் உண்டு. கணவன்-மனைவி இடையே நீண்டநாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பழனி அரிவாளால் மனைவி உள்ளிட்ட 6 பேரை சரமாரியாக வெட்டினார். 6 பேரும் […]

செய்திகள்

கவர்னர் மாளிகையில் விழா: உதய்நிதி ஸ்டாலின் நாளை அமைச்சர் பதவி ஏற்கிறார் ;

தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் சினிமா தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்த நிலையில் ‘ரெட் ஜெயண்ட்’ நிறுவனம் மூலம் திரைப்படங்களை திரையிட்டும் வருகிறார். அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்து அரசியலிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். இதனால் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அவருக்கு இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. கட்சிப் பணியை உதயநிதி திறம்பட செய்து வந்ததால் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தேர்தலில் […]

தூத்துக்குடி

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அடித்துக் கொன்றவருக்கு வலைவீச்சு

தூத்துக்குடி முத்தையாபுரம் திருமாஞ்சி நகரைச் சேர்ந்தவர் ஜான் ராஜ் மகன் இம்மானுவேல் அப்துல்லா (வயது 32). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கன்னித்தாய் (30). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4, 3 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இம்மானுவேல் அப்துல்லா சரிவர வேலைக்கு செல்லாமல், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். இந்நிலையில், நேற்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இம்மானுவேல் […]

செய்திகள்

கடும் பனிமூட்டம்: கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை முடங்கியது ‌

மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. தரை மடத்தில் இருந்து சுமார் 7 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள கொடைக்கானல் மலைவாசஸ்தலத்துக்கு  தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம், டிசம்பர் மாதத்து குளிர் சீசனை அனுபவிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருக்கும்,  தற்போது  கொடைக்கானலில் குளிர் சீசன் நிலவுகிறது. இதன்காரணமாக பகல் இரவு பாராமல் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. பகலில் சாலைகளில் எதிரே வரும் […]

செய்திகள்

சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் 2 நாள் பயணம் : புயல் பாதிப்பு பகுதிகளை

தமிழகத்தை அச்சுறுத்திய மாண்ட்ஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது, பின்னர் வலுவிழந்து  அங்கிருந்து கடந்து சென்றது. இந்த புயலால் பெரும் அளவிலான சேதம் இல்லை. எனினும் மரங்கள் அதிக அளவில் சாய்ந்தன. ஒஇதன் காரணமாக பல இடங்களில் வீடுகள் சேதம் அடைந்தன, மாண்டஸ் புயலின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அதிமுக அமைப்பு செயலாளர் டி,.ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். கடந்த  இரண்டு நாட்களாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அவர் பயணம் மேற்கொண்டு […]

தூத்துக்குடி

2024 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உறுதி; கனிமொழி எம்.பி.பேச்சு

திருச்செந்தூரில் ஒன்றிய, நகர, பேரூர் கழக தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.தி.மு.க. துணை பொதுச்செயலாளர்  கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:- 2024 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும். தி.மு.க.வை வீழ்த்த யாராலும் முடியாது. தி.மு.க.வை எதிர்த்து வெற்றி பெற யாராலும் இயலாது. நமக்குள்ளே கருத்து வேறுபாடுகள், பிரிவினைகள், பிரச்சினைகள், சச்சரவுகள் வந்துவிடக் கூடாது. அதனை புரிந்து கொண்டு தேர்தல் பணியில் நாம் செயல்பட வேண்டும். நமது குடும்பத்திற்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும். […]

கோவில்பட்டி

அனைத்துஅஞ்சலகங்களிலும் ஆதாருடன் மொபைல் எண் இணைத்தல், ஆயுள் சான்று சமர்ப்பித்தல் முகாம்

ஆதாருடன் மொபைல் எண் இணைத்தல், ஆயுள் சான்று சமர்ப்பித்தல் சிறப்பு முகாம் அனைத்து அஞ்சலகங்களிலும் நடக்கிறது. இது குறித்து கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மேற்கண்டவாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,.

தூத்துக்குடி

தூத்துக்குடியில்  துப்பாக்கிச்சூடு நடத்திய  போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை; கலெக்டரிடம்  ஸ்டெர்லைட் எதிர்ப்பு

ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் வழக்கறிஞர் ஹரிராகவன், ஒருங்கிணைப்பாளர்கள் பாத்திமா பாபு, கிருஷ்ணமூர்த்தி, கிதர் பிஸ்மி, மாரிசெல்வம் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரமேஷ், மாநகர செயலாளர் முருகபூபதி, ஐ.ஜே.கே. தென் மண்டல செயலாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன், பிரபு, இளங்கோ, விடுதலை சிறுத்தைகள்  கட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால், தே.மு.தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் தயாள லிங்கம், மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 13 பேரின் குடும்பத்தினர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர், […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்

கோவில்பட்டி ஆயிர வைசிய தொடக்கப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. புத்துயிர் ரத்ததான கழகம் கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பாக நடந்த இந்த  முகாமிற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன் அய்யர் தலைமை வகித்தார் புத்துயிர் ரத்ததான கழக செயலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார் மைக்ரோ பாயிண்ட் கம்ப்யூட்டர் நிறுவனர் ஆம்ஸ்ட்ராங் முகாமினை துவக்கி வைத்தார் டாக்டர்  வித்யா முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு; மாநாட்டில் திரண்ட மக்கள் கூட்டம்

 தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா அனைத்து அணிகள் மற்றும் பிரிவுகள் சார்பில் மாற்றத்திற்கான மாநாடு சனிக்கிழமை மாலை நடந்தது. இதையொட்டி கோவில்பட்டி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. கோவில்பட்டி நகர எல்லையில் இருந்து மாநாடு நடைபெற்ற இடம் வரையிலும் சாலையின் இருபுறத்திலும் கட்சி கொடிகள் நடப்ப்ட்டிருந்தன, மேலும் வரவேற்பு போஸ்டர்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகள்  அதிகம் காணப்பட்டன,’ மாநாட்டிற்கு வந்த பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு கோவில்பட்டி நகர எல்லையில் வரவேற்பு அளிக்கபட்டது, மாநாடு நடைபெற்ற இடத்துக்கு காரில் […]