• February 7, 2025

கடும் பனிமூட்டம்: கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை முடங்கியது ‌

 கடும் பனிமூட்டம்: கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை முடங்கியது ‌

மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. தரை மடத்தில் இருந்து சுமார் 7 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள கொடைக்கானல் மலைவாசஸ்தலத்துக்கு  தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம், டிசம்பர் மாதத்து குளிர் சீசனை அனுபவிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருக்கும்,

 தற்போது  கொடைக்கானலில் குளிர் சீசன் நிலவுகிறது. இதன்காரணமாக பகல் இரவு பாராமல் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. பகலில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாது, இதன் காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி செல்கின்றன, தமிழக சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே இருக்கிறது, மலை கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *